ம.ந.கூட்டணிக்கு அதிமுக கொடுத்ததா ரூ1,500 கோடி? வைரலான வீடியோ குறித்து வைகோ விளக்கம்
திருச்சி: மக்கள் நலக் கூட்டணிக்கு அதிமுக ரூ1,500 கோடி கொடுத்ததா? என்ற பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் கேட்ட கேள்வியால் மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் டென்சனாகி பேட்டியை பாதியில் முடித்துவிட்டு வெளியேறி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், மதிமுக இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வைகோ விளக்கம் தெரிவித்ததாக பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மின்னல் முகமது அலி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வைகோ தெரிவித்ததாக பதிவிட்டுள்ளதாவது:

பாலிமர் கண்ணன் எனக்கு சிறந்த நண்பர்.
அவர் பேட்டி ஆரம்பிக்கும் முன்னரே, கேப்டன் அப்படி தகுதியான தலைவர் இல்லை.
அவருடன் கூட்டு சேர்ந்திருப்பதால், உங்களை எல்லாரும் ஏசுறான்.
உங்களுக்கு ஓட்டு கிடைத்தாலும் உங்கள் அணிக்கு எவனும் ஓட்டு போட மாட்டான் என்றார்.
ஒரு பெண்ணை பார்த்து நீ கற்புள்ளவளா? என்பதை போன்ற கேள்வி, என்னை பார்த்து, 1,500 கோடி ரூபாய் பணம் வாங்கி கொண்டேன் என்ற கேள்வி.
ஒரு பெண்ணை பார்த்து அப்படி கேட்கும் போதே, அவளின் கற்பை சந்தேகத்திற்கு உரியதாக்கிவிடுகிறது.
அதுபோல, இந்த கேள்விக்கு நான் பதிலளித்து இருந்தால், கேள்விதான் பிரதானமாக இருக்கும்.
என்னுடைய பதில் பொதுமக்களிடம் எடுபட்டிருக்காது.
திமுகவை கைப்பற்ற துடிக்கும் கார்ப்பரேட் நிறுவனம் தான் (ஸ்டாலின் வகையறா) என்னை பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்புகிறது.
கண்ணனின் கேள்விக்கு, 'கார்ப்பரேட்டுகளிடம் இருந்து நீங்கள் மாதந்தோறும் 5 லட்ச ரூபாய் வாங்குகிறீர்கள்' என்று எனக்கு வரும் தகவல் உண்மையா? என்று கேட்டிருந்தால் அவர் என்ன செய்திருப்பார்.
நான் அவரை அவமானப்படுத்த விரும்பவில்லை.
அவரை மதிக்கும் விதமாக பேட்டியில் இருந்து விலகுவதாக மரியாதையாக கூறி விலகினேன்.
நாங்கள் கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர்கள்
திருச்சியில் வைகோ விளக்கம்.
இவ்வாறு அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications