கருணைக்கும் சகிப்புத்தன்மைக்கும் இலக்கணமானவர் இயேசு பிரான்: வைகோ கிறிஸ்துமஸ் வாழ்த்து
சென்னை: கொலைகளும், படுகொலைகளும், பஞ்சமா பாதகங்களும் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற இன்றைய நிலையில், இயேசு பெருமானின் மனிதநேய அமுத மொழிகள் தமிழ்நாட்டுக்கு இன்றியமையாத தேவையாகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப் பட உள்ள நிலையில் கிறிஸ்தவ பெருமக்களுக்கு வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
ஆதி அந்தம் இல்லாத கால ஓட்டத்தை கிறிஸ்துவுக்கு முன்பும், கிறிஸ்துவுக்குப் பின்பும் என வரையறுக்கும் உன்னதமான நாள்தான் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளாகும். அளவிட முடியாத கருணைக்கும், சகிப்புத் தன்மைக்கும் இலக்கணமான இயேசு பெருமான், தான் சித்திரவதைக்கு உள்ளானபோதும், கல்வாரியில் அவரது சிரசில் முள்முடி சூட்டி, சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்திய போதும் தன்னைக் கொடுமைப்படுத்தியவர்களையும் மன்னிக்கச் சொன்ன அவரது தியாகப் பண்பு மனிதகுலத்துக்கு வழிகாட்டுகின்ற ஒளியாகும்.
மலைப் பிரசங்கத்தில் அவர் செய்த உபதேச மொழிகள் துன்பப்படுகிறவர்களுக்கு மாமருந்தாகும். பகையும் வெறுப்பும் வளர்ந்து, கொலைகளும், படுகொலைகளும், பஞ்சமா பாதகங்களும் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற இன்றைய நிலையில், இயேசு பெருமானின் மனிதநேய அமுத மொழிகள் தமிழ்நாட்டுக்கு இன்றியமையாத தேவையாகும்.
அன்பையும், கனிவையும் பரிமாறும் நேசர்களான கிறித்துவப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications