சுதந்திர ஈழம் மலரட்டும், காங். படுதோல்வி அடையட்டும்.. வைகோவின் புத்தாண்டு வாழ்த்து
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலைக் காணும் இந்த ஆண்டில், ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு உடந்தையாகச் செயல்பட்ட காங்கிரஸ், படுதோல்வியைச் சந்திக்கவும், சுதந்திரத் தமிழ் ஈழம் மலரவும், தாய்த் தமிழகத்தின் வாழ்வு ஆதாரங்கள் காப்பாற்றப்படவும், ஊழல் அற்ற அரசியல் வெற்றி பெறவும் சூளுரைப்போம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி...
ஆதி அந்தம் இல்லாத கால வெள்ளத்தில், எழுந்து விழும் அலைகளுள் ஒன்றாக எழுகிறது 2014 ஆம் ஆண்டு.

விண்ணில் பறந்து, நிலவில் கால் பதித்து, செவ்வாய்க் கோளை ஆய்வு செய்யும் அளவுக்கு அறிவியலில் மனிதன் சாதனை புரிந்தான்.
ஆனால், இயற்கையின் அற்புதப் படைப்பான சுற்றுச் சூழலை மாசுபடுத்தி நாசமாக்கியதால் அச்சுறுத்தும் அபாயம்; பசியின் பிடியிலும், நோயின் மடியிலும் துன்புறும் கோடிக்கணக்கான மக்கள்; மனித உரிமைகளை நசுக்கி, தேசிய இனங்களை ஒழிக்கத் துடிக்கும் இனவாத அடக்குமுறை; அரசியலில் தமிழகத்திலும் இந்தியத் துணைக்கண்டத்திலும் தலைவிரித்து ஆடுகின்ற ஊழல் இவையெல்லாம் நாம் எதிர்கொள்ளும் அறைகூவல்கள்.
எனவே, சுற்றுச் சூழலைக் காக்கவும், பசி இல்லாத, நோய் இல்லாத வாழ்வைப் பெறவும், மனித நேயம் எங்கும் தழைக்கவும், பூக்கும் புத்தாண்டில் வழி அமைப்போம்.
நாடாளுமன்றத் தேர்தலைக் காணும் இந்த ஆண்டில், ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு உடந்தையாகச் செயல்பட்ட காங்கிரஸ், படுதோல்வியைச் சந்திக்கவும், சுதந்திரத் தமிழ் ஈழம் மலரவும், தாய்த் தமிழகத்தின் வாழ்வு ஆதாரங்கள் காப்பாற்றப்படவும், ஊழல் அற்ற அரசியல் வெற்றி பெறவும் சூளுரைப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
-
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications