வைகோ தந்த தங்க மோதிரத்தை பத்திரமாக ‘பாக்கெட்டில்’ வைத்திருக்கும் திருமா!
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அணிவித்த தங்க மோதிரத்தை, கைகளில் அணியாவிட்டாலும் பத்திரமாக சட்டை பாக்கெட்டில் தான் வைத்துள்ளாராம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணியை அமைத்தன. தற்போது மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக, தமாகாவும் இணைந்துள்ளது.

இந்நிலையில், இந்தக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மோதிரச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவனுக்கு 2 சவரன் மதிப்புள்ள தங்க மோதிரத்தை அணிவித்தார்.
தனது பெற்றோர், நண்பர்கள் கொடுத்தபோதுகூட அதை அணியாத திருமாவளவன், வைகோ தந்த மோதிரத்தை அணிந்தே அடுத்தடுத்து நடந்த பிரச்சாரக்கூட்டங்களில் பங்கேற்றார். இதனை பெருமையாக தனது பிரச்சாரத்தில் வைகோவும் குறிப்பிட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தண்டையார்பேட்டையில் நடைபெற்ற தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா வேட்பாளர் அறிமுக பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட திருமாவளவனின் கையில் மோதிரம் இல்லாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியானது.
ஆனால், இது உண்மையில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதிரம் போடும் பழக்கம் இல்லாத திருமாவளவனுக்கு, வைகோ அணிவித்த 2 பவுன் மோதிரத்தை விரலில் அணிந்திருப்பது பெரும் பாரமாக இருக்கிறதாம். இதனால், அடிக்கடி அதனை கழற்றி ஒவ்வொரு விரலாக மாற்றி வந்தாராம்.
ஒருகட்டத்தில் தனது இந்த செயல்கள் தனக்கே வித்தியாசமாகப் பட்டதால், மோதிரத்தைக் கழற்றி விட்டாராம். ஆனால், அதனை வேறு எங்காவது வைத்தால், அது காணாமல் போய்விடும் என்பதால், அதனை தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்தபடி பிரச்சாரங்களில் பங்கேற்கிறாராம் திருமாவளவன். மற்றபடி கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே எந்தவித பிணக்கும் இல்லையாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications