வைகோ தாயார் மாரியம்மாள் உடல் கலிங்கப்பட்டியில் தகனம்!
சென்னை: ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவின் தாயார் மறைந்த மாரியம்மாள் உடல் கலிங்கப்பட்டியில் இன்று தகனம் செய்யப்பட்டது.
வைகோவின் தாயார் மாரியம்மாள் உடல் நல குறைவு காரணமாக பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவருக்கு 3 மகள்களும், வைகோ, கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

வைகோவின் தாயார் உடல் நலக்குறைவு தகவல் நேற்று அதிகாலை சென்னையில் இருந்த வைகோவிற்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். காலை 10.50 மணிக்கு பாளை. மருத்துவமனைக்கு வந்த வைகோ தனது தாயாரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர் காலை 11.10 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் மாரியம்மாளின் உடல் கலிங்கப்பட்டி கொண்டு செல்லப்பட்டது. கலிங்கப்பட்டியில் உள்ள வைகோவின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக மாரியம்மாளின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
வைகோவின் வீட்டுக்கு நேற்று மாலை கனிமொழி எம்பி, வந்து அவரது தாயார் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் வைகோ குடும்பத்தினருக்கு கனிமொழி ஆறுதல் கூறினார்.
கலிங்கப்பட்டியில் இறுதி அஞ்சலி
வைகோ தாயார் மாரியம்மாள் உடலுக்கு தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் அரசியல் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் மாரியம்மாளின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கலிங்கப்பட்டி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications