எந்த நாட்டுக்குப் பிரதமராகப் போகிறாரோ ஜெ.- 'மாஜி சகோதரர்' வைகோ நக்கல்!
நாகர்கோவில்: அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதா பிரதமராகப் போகிறார் பிரதமராகப் போகிறார என்று கூறி வருகிறார்கள். அவர் எந்த நாட்டுக்குப் பிரதமராகப் போகிறாரோ தெரியவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நக்கல் விட்டுள்ளார்.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாஜ தலைவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் செய்தார் வைகோ.
அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சி, ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளது. தமிழர்களை அழிக்கத் துடித்த ராஜபக்ஷேவுக்கு உதவி செய்த காங்கிரஸ் கட்சிக்கு மன்னிப்பே கிடையாது.

நாங்கள் அங்கம் வகிக்கும் அரசு மத்தியில் ஆட்சியமைக்கும் என்கிறார் ஜெயலலிதா. ஆனால், அ.தி.மு.க. தொண்டர்களோ, ஜெயலலிதா பிரதமராக வருவார் என்று கூறி வருகிறார்கள். அவர் எந்த நாட்டிற்கு பிரதமராவாரோ தெரியவில்லை.
மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி 320 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியை அமைக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரி தொகுதி வெற்றிகளை கணக்கில் எடுக்காமலேயே மோடி பிரதமராகிவிடுவார். தமிழகத்தில் 39 இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்றால்தான் நாடாளுமன்றத்தில் தமிழனின் குரலும் எடுபடும்.
மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர் அல்ல. 2002 குஜராத் கலவரத்திற்குப்பின் மோடி ஆளும் குஜராத்தில் எந்த ஒரு கலவரமும் நடக்கவில்லை. முஸ்லீம், கிறிஸ்துவர்கள் அங்கே பாதுகாப்பாக உள்ளனர். வேலைவாய்ப்பிலும் அவர்களுக்கு இடஒதுக்கீட்டை மோடி அளித்துள்ளார் என்றார் வைகோ.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ












Click it and Unblock the Notifications