அம்மா அழைப்பு மையம் எதுக்கு தெரியுமா?.... ரகசியத்தை அம்பலப்படுத்தும் வைகோ
சென்னை: அம்மா அழைப்பு மையம் என்பது மக்கள் குறைகளைத் தீர்ப்பதற்கு அல்ல... எந்த தெருவுக்கு ஓட்டுக்கு பணம் வரவில்லை என்று சொல்வதற்குத்தான் அமைக்கப்பட்டுள்ளதாக ரகசியத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.
சென்னையில் மக்கள் நலக் கூட்டணியின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது வைகோ கூறியதாவது:

மக்கள் நலக் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த பலர் எண்ணுகின்றனர். மக்கள் நலக்கூட்டணி தேர்தல் வரையாவது நீடிக்குமா, தேர்தலில் போட்டியிடுமா அல்லது கூட்டணி உடைந்து விடுமா என சில பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன.
அரசியல் கட்சியினரும் இதே எண்ணத்துடன்தான் உள்ளனர். நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். சசிபெருமாள் மரணம், சமீபத்திய மழை வெள்ளம், ஹைதராபாத் தலித் மாணவர் தற்கொலை விவகாரம் உள்பட பல பிரச்னைகளில் நாங்கள் ஒன்றாகத்தான் போராடி வருகிறோம்.
தினமும் சந்தித்து பேசுகிறோம். நாளுக்கு நாள் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்குள் புரிதல் அதிகரித்து வருகிறது.
அம்மா அழைப்பு மையம் இதுக்குத்தான்..
நாலே முக்கால் ஆண்டு மக்களை சந்திக்காமல், ஆட்சி முடியும் தருவாயில், குறைகளை கேட்க 'அம்மா அழைப்பு மையம்' துவங்கப்பட்டுள்ளது. இது குறைகளை கேட்க அல்ல.
எங்கள் தெருவில் ஓட்டுக்கு இன்னும் பணம் வரவில்லை என மக்கள் தெரிவிப்பதற்காக இந்த மையம் துவங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வைகோ கூறினார்.
ஓ!
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications