விவசாயிகளின் தொடர் மரணம்.. குடும்பத்திற்கு 25 லட்சம்.. மதுரையில் வைகோ ஆர்ப்பாட்டம்
வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும் என்று வைகோ கோரியுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வைகோ கோரினார்.
காவிரியில் இருந்து நீர் கிடைக்காததாலும், வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதாலும் தமிழகத்தில் வறட்சி தாண்டவமாடி வருகிறது. இந்த கடுமையான வறட்சி ஏற்படுத்திய பாதிப்பால் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நெல், சோளம், கரும்பு என அனைத்து பயிர்களும் கருகிய வேதனையில் இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி இன்று மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய வைகோ, நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் வழங்க வேண்டும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மேலும், விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடனை மத்திய அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications