கச்சத்தீவில் புதிய தேவாலயம்: இலங்கை அரசின் முயற்சியை தடுக்க வைகோ வலியுறுத்தல்!
சென்னை: கச்சத்தீவில் இலங்கை அரசு புதிய கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திரா காந்தி ஆட்சியின் போது மத்திய அரசு 1974 ஆம் ஆண்டு, கச்சத் தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்தது. அதன்படி போடப்பட்ட ஒப்பந்தத்தில், தமிழக மீனவர்கள் அங்கு மீன் பிடிக்கும் மரபு உரிமையும், மீன்பிடி வலைகளை உலர்த்தவும் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டது.
ஆனால் கடந்த முப்பது ஆண்டு காலமாக இலங்கை அரசின் கடற்படை, தமிழக மீனவர்களை எல்லை கடந்து வந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இலங்கை அரசு கச்சத் தீவில் ஒரு கோடி ரூபாய் செலவில் புதிய கிறிஸ்தவ தேவாலயம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி இருக்கிறது. இலங்கை அரசு கச்சத் தீவில் கிறிஸ்தவ தேவாலயம் அமைப்பதின் நோக்கம், கச்சத் தீவை தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக வைத்துக்கொள்வதுடன், தமிழக மீனவர்கள் அங்கு செல்வதை தடுப்பதும்தான் என்பது திட்டவட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது.
இதன்மூலம் கச்சத் தீவில் உள்ள அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு தமிழக மீனவர்கள் சென்று வருவதை தடை செய்ய இலங்கை அரசு முயற்சிக்கிறது. எனவே இலங்கை அரசு, கச்சத் தீவில் கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கும் திட்டத்தை இந்திய அரசு தடுத்து நிறுத்துவதுடன், இந்திய அரசு இலங்கையுடன் செய்துகொண்ட கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு வைகோ தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications