தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலை வைகோ பார்வையிட்டார்... ஆனால் சாமி தரிசனம் செய்யவில்லை
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு சென்ற வைகோ அங்கு சாமி தரிசனம் செய்யவில்லை. ஆனால் சிற்பங்களை மட்டும் பார்வையிட்டார்.
தஞ்சை: கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு சென்ற வைகோ அங்கு சாமி தரிசனம் செய்யவில்லை. எனினும் சிற்பங்களை பார்வையிட்டு குறிப்புகளை எடுத்துக் கொண்டார்.
மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் அருகே மாதிரிமங்கலத்தில் நேற்று ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. பின்னர் அதிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது.
அந்த இடத்தை பார்வையிடுவதற்காக தஞ்சாவூர் வந்திருந்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. மாதிரிமங்கலம் செல்வதற்கு முன்னர் தாராசுரம் சென்றார்.

சிவன் கோயிலுக்கு...
தாராசுவரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு சென்றார். அப்போது அவரை சுவாமி தரிசனம் செய்ய அர்ச்சகர்கள் அழைத்தனர்.

போகவில்லை
எனினும் வைகோ சுவாமி தரிசனம் செய்யவில்லை. பகுத்தறிவு இயக்கத்தை சேர்ந்த தான் சாமி கும்பிட வர இயலாது என்று வைகோ மறுத்துவிட்டார்.

சிலைகளை பார்வை
சாமி தரிசனம் செய்யவில்லையென்றாலும் கோயில் வளாகத்தில் கலை வேலைப்பாடுகளுடன் வைக்கப்பட்ட சிற்பங்களை வைகோ பார்வையிட்டார். அதன் பின்னர் கல்வெட்டுகளை பார்த்து வியந்தார்.

குறிப்பெடுத்தார்
கல்வெட்டுகளில் எழுதப்பட்டிருந்த வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றை அவர் குறிப்பெடுத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் மாதிரிமங்கலத்துக்கு புறப்பட்டு சென்றார்.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications