ஆந்திராவால் தமிழகத்தின் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாதிப்பு- புல்லூர் தடுப்பணையை பார்வையிட்ட வைகோ புகார்
வேலூர்: பாலாற்றின் குறுக்கே ஆந்திரா கட்டும் 22 தடுப்பணைகளால் தமிழகத்தின் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
வாணியம்பாடி அடுத்த புல்லூர் பாலாற்றுப் பகுதியில் தடுப்பணையை ஆந்திர அரசு உயர்த்திக் கட்டியது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அதேபோல் புல்லூர் பாலாற்றில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கனகநாச்சியம்மன் கோவில் இருந்து வந்தது. இந்த கோவிலையும் ஆந்திரா பறித்துக் கொண்டது.

சீனிவாசன் தற்கொலை
இதனிடையே திம்மாம்பேட்டை பள்ளத்தூரைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் என்பவர் புல்லூர் தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க எதிர்ப்புத் தெரிவித்து அணையில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தடுப்பணையில் சீனிவாசன் கால்தவறி விழுந்தார் என வேலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

புல்லூரில் வைகோ
இந்த நிலையில் துரைமுருகன் தலைமையிலான திமுக எம்.எல்.ஏ.க்கள் குழு அண்மையில் புல்லூர் தடுப்பணையை பார்வையிட்டனர். இதேபோல் மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று புல்லூர் தடுப்பணையைப் பார்வையிட்டார்.

விவசாயிகளுடன் சந்திப்பு
பின்னர் அங்கு விவசாயிகளிடம் ஆந்திரா அரசின் இந்த நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புகளை வைகோ நேரில் கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மைசூர் மாகாண ஒப்பந்தத்தை மீறி ஆந்திரா அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது.

4 லட்சம் ஏக்கர் நிலம் பாதிப்பு
பாலாற்றின் குறுக்கே மொத்தம் 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது ஆந்திரா. ஆந்திராவின் இந்த நடவடிக்கையால் தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தின் 4 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாதிப்படைந்துள்ளது. இவ்வாறு வைகோ கூறினார்.

சீனிவாசன் குடும்பத்துக்கு...
பின்னர் புல்லூர் தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சீனிவாசன் வீட்டுக்கு வைகோ சென்றார். அங்கு சீனிவாசன் படத்துக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல் கூறினார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications