ராஜராஜ சோழன் வழிபட்ட பட்டீஸ்வரன் கோயிலில் வைகோ! பரிவாரம் கட்டி மாலை அணிவித்து மரியாதை!!
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் வழிபாடு நடத்திய கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயிலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றார். அங்கு அவருக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து கோயில் நிர்வாகத்தினர் மரியாதை செலுத்தினர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி பிரச்சனை, மீத்தேன் திட்டம், மதுவிலக்கு ஆகிய பிரச்சினைகளில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஒரு வாரமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள்.

அம்மன் கோவிலில் வைகோ
இந்த சுற்றுப் பயணத்தின் இடையே கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயிலுக்கு வைகோ சென்றார்.

பரிவட்டம் கட்டி..
அங்கு வைகோவுக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து கோயில் நிர்வாகத்தின் மரியாதை செலுத்தினர். பின்னர் வைகோ முன்னிலையில் பூஜைகள் நடத்தப்பட்டன.

ராஜராஜன் வழிபாடு..
அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசிய வைகோ, ராஜராஜ சோழன் தன் இலங்கைப் போருக்கு செல்வதற்கு முன்பாக இதே பட்டீஸ்வரன் துர்க்கை அம்மனை வணங்கிவிட்டுத்தான் தன் பயணத்தைத் துவங்கினான். அதை நினைவில் கொண்டுதான் நான் இக்கோயிலுக்கு வந்திருக்கிறேன் என்றார்.

மழபாடி..
தற்போது பட்டீஸ்வரம் என்ற ஊர் சோழர்காலத்தில் மழபாடி என்றழைக்கப்பட்டது. ராஜராஜ சோழன் உள்ளிட்ட சோழ மன்னர்கள் போருக்குச் செல்லும் முன்பு இந்த கோயிலில் அருள்வாக்கு அனுமதி பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications