For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜபக்சே அழைப்பை திரும்பப் பெறுங்கள்.. மோடிக்கு வைகோ உருக்கமான வேண்டுகோள் கடிதம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு வைகோ இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

நரேந்திர மோடியின் 26-ந் தேதி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சே அழைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வைகோ கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் ராஜபக்சேவை அழைத்தது சரிதான் என்று பாரதிய ஜனதா கட்சி நியாயப்படுத்தி பேசி வருகிறது.

Vaiko wrote a letter to Modi on Rajapksa issue

தமிழகத்திலோ முதல்வர் ஜெயலலிதா உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களுமே ராஜபக்சேவை அழைத்ததை எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நரேந்திர மோடிக்கு வைகோ உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், உங்கள் பதவியேற்பு விழாவில் ராஜபக்சேவை அழைக்க வேண்டும். அது தமிழர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருக்கிறது.

கடந்த 1998. 99ஆம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்ற போது, 2004,2009ஆம் ஆண்டு காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்றதும் ராஜபக்சே அழைக்கப்படவில்லை.

தற்போது ராஜபக்சேவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை நீங்கள் திரும்பப் பெற்றால் தமிழர்களின் மனக்காயத்துக்கு மருந்தாக இருக்கும் என்று வைகோ உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

English summary
MDMK leader Vaiko wrote a letter to Narendra modi , I would request you totally avoid the presence of Sri lankan President Rajapaksa in the swearing in the ceremony.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X