ஜெ.வுக்கு நீர்ச்சத்துக் குறைவு.... அப்படியே கர்நாடகாவுக்கும் கோரிக்கை வைத்த வைரமுத்து
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடு உள்ளதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அப்படியே கர்நாடகா காவிரி நீரைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
இது தொடர்பாக வைரமுத்து வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா விரைவில் முழுநலம் காண முழு மனதோடு வாழ்த்துகிறேன்.

போற்றுதலுக்குரியது...
அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெவ்வேறு சொற்களில் ஆனால் ஒரே குரலில் அவரை வாழ்த்தியிருப்பது அரசியல் நாகரிகத்தின் அடையாளமாகும். இந்தப் பொதுவெளிப் பண்பாடு போற்றுதலுக்குரியது மற்றும் தொடரவேண்டியது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.

கர்நாடகா முதல்வரின் வாழ்த்து
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்த்தும் ஆழ்ந்த கவனம் பெறுகிறது. அவருக்கு நன்றி. தம் சுட்டுரையில் தமிழக முதல்வர் உடல்நலம்பெற வாழ்த்தியிருக்கும் கர்நாடக முதல்வர் அந்த உடல்நலக் குறைவுக்கான காரணத்தையும் அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

நீர்ச்சத்தால் பாதிப்பு
நீர்ச்சத்துக் குறைவுதான் தமிழ்நாட்டு முதலமைச்சரின் உடல்நலக்குறைவுக்கு முதற்காரணமென்று மருத்துவ அறிக்கை சொல்கிறது. ஓர் உடம்பில் நீர்ச்சத்து குறைந்தாலே உடல்நலம் சீர்கெடும் என்றால், மாநிலத்தின் நீர்ச்சத்து குறைந்தால் தமிழ்நாட்டின் நலம் எவ்வளவு கெடும் என்பதைக் கர்நாடக முதலமைச்சர் அறியாதவர் அல்லர்.

கை கொடுங்கள்..
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உதறி எறிவதோ காவிரி மேலாண்மை வாரியத்தின் மீது இன்னோர் அணை கட்டுவதோ இந்திய இறையாண்மைக்கு ஏற்புடையதல்ல. ஆகவே சட்டத்திற்கும் மரபுரிமைக்கும் இணங்க தமிழ்நாட்டு விவசாயிகளுக்குக் கர்நாடக சகோதரர்கள் கைகொடுக்க வேண்டும்.

உரிமையை பிச்சை கேட்பதா?
உலகத் துயரங்களில் மிகவும் வலிதருவது உரிமையைப் பிச்சை கேட்பதுதான். உரிமை என்பது பிச்சைப்பொருள் அல்ல. வானம் கண் திறப்பதையும் கர்நாடகம் அணை திறப்பதையும் நம்பித்தான் எங்கள் பாசனப் பரப்பில் பயிர் வளர்க்கிறோம்.

விவசாயி மகனாக...
தமிழ்நாட்டு முதலமைச்சர் நலத்தில் அக்கறைகொண்ட கர்நாடக முதலமைச்சர் தமிழ்நாட்டு நலத்திலும் அக்கறைகாட்ட வேண்டுமென்று ஒரு விவசாயி மகன் என்ற முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications