“நன்றி கெட்ட மனிதனைவிட நாய்கள் மேலடா”.. எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக அட்டாக் செய்த வைத்திலிங்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : "ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி. தினகரன் இருவரும் சந்தித்ததை மாய மானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது என்று துரோகி எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளது, "நன்றி கெட்ட மனிதனைவிட நாய்கள் மேலடா" என்பதற்கேற்ப அமைந்துள்ளது." என காட்டமாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்.

அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, எடப்பாடியின் கை ஓங்கியது. அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. இந்தச் சூழலில் அதிமுகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கி செயல்பட்டு வரும் டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். இது அரசியல் அரங்கில் பரபரப்பைப் பற்றவைத்தது.

டிடிவி தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, மாய மானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது, பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான் என்றார். மேலும் டிடிவி.தினகரனை ஓபிஎஸ் சந்திக்கும் போது ஓபிஎஸ்ஸுடன் எப்போதும் கூட இருக்கும் 3 பேர் எங்கே? வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகிய 3 பேரும் ஓபிஎஸ்ஸை கைவிட்டுவிட்டனர் எனத் தெரிவித்தார்.

வைத்திலிங்கம் பதிலடி : இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள வைத்திலிங்கம், "தான் யார் யார் காவைப் பிடித்து, ஊர்ந்து முதலமைச்சராக ஆனார் என்பதையும்; யாரிடம் கெஞ்சிக் கூத்தாடி, தூதுவிட்டு முதலமைச்சராக நான்கு ஆண்டு காலம் நீடித்தார் என்பதையும் மறந்து, இல்லை மறைத்து, ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், டிடிவி. தினகரன் அவர்களும் சந்தித்ததை மாய மானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது என்று துரோகி விமர்சித்துள்ளது, "நன்றி கெட்ட மனிதனைவிட நாய்கள் மேலடா" என்பதற்கேற்ப அமைந்துள்ளது.

Vaithilingam retaliates Edappadi palanisamy who criticizes OPS and TTV dinakaran meet

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநாடு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய நிலையில், இருவரின் சந்திப்பானது காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்ததைப் போன்று உள்ளது என்று துரோகி சொல்வது கேலிக்கூத்தாக இருக்கிறது. "ஆமை புகுந்த வீடும், அமீனா நுழைந்த வீடும் உருப்படாது" என்ற பழமொழிக்கேற்ப, துரோகியின் நுழைவால் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாக மாற்றுவதற்கான சந்திப்புதான் இருவரின் சந்திப்பு.

ஒன்று கூடி எடுத்த முடிவு : புது டெல்லியில் மத்திய உள் துறை அமைச்சர் சந்திப்பின்போது சிலர் இடம்பெறாதது குறித்து தொலைக்காட்சிகளில் நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளிக்க இயலாத எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் - டி.டி.வி.தினகரன் சந்திப்பின்போது, வைத்திலிங்கம் எங்கே? ஜெ.சி.டி. பிரபாகர் எங்கே? மனோஜ் பாண்டியன் எங்கே? என்று வினவியிருக்கிறார்.

இந்தச் சந்திப்பே, அண்ணன் ஓ.பன்னீர்செல்வம், பண்ரூட்டி ச.ராமச்சந்திரன், கு.ப. கிருஷ்ணன், ஜெ.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் மற்றும் நான் ஆகியோர் ஒன்றுகூடி முடிவு எடுத்த பிறகுதான் நடைபெற்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்களை பற்றி பேசும்முன் தன் முதுகில் உள்ள ஓட்டையை எடப்பாடி பழனிசாமி பார்க்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

தி.மு.கவின் 'B' டீம் துரோகி : ஒரு தலைவர் இறந்தால், அதற்கான இரங்கல் தீர்மானம் என்பது பேரவைத் தலைவரால் கொண்டு வரப்படுவது என்பது மரபு இந்த மரபை முற்றிலும் மீறி, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி மறைவுற்றது குறித்த இரங்கல் தீர்மானத்தை மாண்புமிகு பேரவை முன்னவர் மூலம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழியச் செய்தது துரோகி.

இந்தத் தீர்மானத்தில் அவரை வெகுவாக புகழ்ந்து பேசியது துரோகி, சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சருக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக துரைமுருகன் துரோகியை சந்தித்தபோது, துரோகி என்ன சொன்னார் என்பதை துரைமுருகன் அவர்களே வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளிலிருந்து, தி.மு.க.வின் 'B' டீம் துரோகி என்பது கண்கூடாகத் தெரிகிறது.

பண்ருட்டியாரை விமர்சிப்பதா? : இதுபோன்ற செயல்களும், கொலை, கொள்ளை வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக ரகசியமாக சந்திப்பது, தூது விடுவது போன்றவைதான் தி.மு.க.வின் "B" டீம் என்பதற்கான உதாரணங்களாகும். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும், தற்போதும் தி.மு.க.வின் 'B' டீமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் துரோகி. இதனை அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

அடுத்ததாக, அதிமுக அரசியல் ஆலோசகரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் கிளைச் செயலாளருக்கு கூட தகுதி இல்லாதவர் என்று துரோகி விமர்சனம் செய்திருப்பது அவரது அறியாமையையும், ஆளுமைத் திறமையின்மையையும் கோடிட்டுக் காட்டுகிறது. பண்ருட்டி இராமச்சந்திரன், பேரறிஞர் அண்ணா அவர்களால் தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர். அரசு வேலையை உதறித் தள்ளிவிட்டு அரசியலுக்கு வந்தவர். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் பல ஆண்டு காலம் அமைச்சர் பதவியை வகித்தவர்.

ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவர். இவரை விமர்சனம் செய்வது என்பது ஆணவத்தின் வெளிப்பாடு. கொலை வழக்கிலிருந்து தப்பியது எப்படி? சட்டமன்ற உறுப்பினரானது எப்படி? அமைச்சரானது எப்படி? முதலமைச்சரானது எப்படி? முதலமைச்சராக நான்கு ஆண்டு காலம் நீடித்தது எப்படி? என்பதையெல்லாம் மறந்து மனம் போன போக்கில் துரோகி பேட்டி அளித்திருப்பதைப் பார்க்கும்போது 'மனம் ஒரு குரங்கு' என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

Vaithilingam retaliates Edappadi palanisamy who criticizes OPS and TTV dinakaran meet

பதில் எங்கப்பா? : மாண்புமிகு முதலமைச்சரை அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினார் என்று துரோகி கூறியபோது அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவதாகவும், நிருபிக்க முடியாவிட்டால் எடப்பாடி பழனிசாமி அரசியலிலிருந்து விலகுவாரா என்றும் அண்ணன் ஓபிஎஸ் கேட்டார். இதுநாள் வரை இதற்குப் பதில் இல்லை. அதேபோல, அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவில் சேர தூதுவிட்டதாக பேசினார் எடப்பாடி பழனிசாமி. இது "அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு" என பேட்டி அளித்தார் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம். இதற்கும் இதுநாள் வரை எந்தப் பதிலும் இல்லை.

அந்த வகையில், தற்போது மற்றுமொரு பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் கோயபல்ஸ் வேலையை செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது நிச்சயம் தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எடுபடாது. 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு' என்பார்கள். ஆனால், கெட்டவனின் புளுகு எட்டு மணி நேரத்திற்கு கூட தாங்காது.

துள்ளுகிற மாடு பொதி சுமக்காது : இந்த வகையில் எடப்பாடி பழனிசாமியின் குட்டு வெளிப்பட்டுவிட்டது. தி.மு.க.வின் 'B' டீமாக செயல்படுவது துரோகி என்பதை தொண்டர்களும், மக்களும் புரிந்து கொண்டுவிட்டார்கள். துரோகியின் பேட்டிகளைப் பார்க்கும்போது 'துள்ளுகிற மாடு பொதி சுமக்காது" என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

அதாவது துள்ளுபவர்கள் பொறுப்பை ஏற்கமாட்டார்கள். துள்ளாத தலைவனுக்கு மக்கள் வாக்களிக்க முடிவெடுத்துவிட்டார்கள். "எப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவர்க்கும் அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. செய்நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை" என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, துரோகி அவர் செய்த பாவத்திலிருந்து என்றைக்கும் விடுபட முடியாது" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+