காதலர் தினம்: நாய்களுக்குத் திருமணம், கிரீட்டிங்ஸ் கிழிப்பு... 30 இந்து முன்னணியினர் கைது
சென்னை: காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்து போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், திருப்பூரில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது அன்புப் பரிசுகளை பரிமாறிக் கொண்டும், பிடித்த இடங்களுக்கு ஜோடியாகச் சென்றும் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், காதலர் தினக் கொண்டாட்டங்கள் கலாச்சார சீரழிவுக்கு வழியமைப்பதாக இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இத்தகைய கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழிக்கும் போராட்டம் காந்திபுரம் கிராஸ்கட் சாலை சந்திப்பில் நடைபெற்றது. போராட்டத்துக்கு செய்தி தொடர்பாளர் சசிக்குமார் தலைமை தாங்கினார்.
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டவாறே, அவர்கள் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்துப் போட்டனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கும் போலீசார் தடை விதித்திருந்தனர். ஆனால், தடையை மீறி மாநகர் மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலாளர் சேவூகன் தலைமையில் தொண்டர்கள் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இதற்காக 2 நாய்களை கொண்டு வந்த அவர்கள் தாம்பூல தட்டில் பழங்கள் வைத்து சடங்குகள் செய்து தாலிகட்டி, மோதிரம் அணிவித்தனர்.
இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் காதலர் தினத்தை, ‘கழிசடைகள் தினம்' என குறிப்பிட்டு இந்து முன்னணியினர் நோட்டீசும் ஒட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications