கன்னியாகுமரி டூ பிலிப்பைன்ஸ் "லவ் லவ்".. காதலர் தினத்தில் "டும் டும்"!
கன்னியாகுமரி: ஜாதி, மொழி, மதம், ஏன் தேசங்களையை கடந்தது காதல். உண்மைக் காதல் எத்தனை போராட்டங்களை சந்தித்தாலும் வெல்லும். இதை உண்மை என்று நிரூபிக்கும் விதமாக , காதலர் தினத்தில் குமரி மாவட்ட இளைஞருக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்னுக்கும் நடந்த காதல் திருமணம் மாவட்டத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் ஆன்ட்ரூஸ் டேவிட் ,31. கடந்த 7 ஆண்டுகளாக துபாயில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவருடன் பணியாற்றி வரும் பிலிப்பைன்ஸ் நாட்டின் புலகான் பகுதியை சேர்ந்த ஷெரிலின் எஸ்.சாண்டியகோ என்பவருக்கும் இடையே நான்கு ஆண்டுகளுக்கு முன் காதல் மலர்ந்தது.

இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்ட பின் தங்கள் காதல் குறித்து இரு தரப்பு பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். பெற்றோர் தங்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
டேவிட் ஆன்ட்ரூஸ் தனது சொந்த ஊரில் தன் காதலியை திருமணம் செய்து கொள்ள ஷெரிலினின் பெற்றோரிடம் அனுமதி கேட்டார். அதற்கு அவர்கள் அனுமதி அளித்தனர். பிலிப்பைன்சிலிருந்து ஒரு நபருக்கு போக்குவரத்து செலவு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் ஆகும் என்பதால் ஷெரிலினை மட்டும் அவரது பெற்றோர் இந்தியாவுக்கு வழியனுப்பி வைத்து வாழ்த்தினர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வந்தார் ஷெரிலின், அங்கிருந்து அவரை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்த டேவிட் ஆன்ட்ரூஸ், காதலர் தினமான நேற்று , தன் பெற்றோர் தலைமையில் உற்றார், உறவினர் முன்னிலையில் வெட்டூர்ணிமடம் பூத் டக்கர் ஆலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
காதலர் தினத்தையொட்டி காதல் திருமணத்தை அரங்கேற்றிய இத்தம்பதியரை அனைவரும் காதலர் தின வாழ்த்தோடு பாராட்டுக்களைத் தெரிவித்தனர். கன்னியாகுமரியில் பிறந்த டேவிட்டை பிலிப்பைன்ஸ் நாட்டின் குமரி ஷெரிலின் , காதலர் தினத்தில் கரம் பிடித்து தங்களின் காதல் உண்மையானது என்று நிரூபித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications