வனரோஜா வந்த கார் பள்ளத்தில் உருண்டு விபத்து..!
திருவண்ணாமலை: ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி. வன ரோஜா பயணித்த கார் பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானதில் அவரும், அவரத் கணவர், கார் டிரைவர் ஆகியோர் காயமடைந்தனர்.
திருவண்ணாமலை தொகுதி எம்.பி. வனரோஜா. இவர் செங்கம் நகரில் வசித்து வருகிறார். ஓ.பி.எஸ் அணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஓ.பி.எஸ் அணி ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த வனரோஜா இங்கேயே தங்கியிருந்தார். நேற்று தனது ஊருக்கு காரில் புறப்பட்டார். காரை திருமலை என்பவர் ஓட்டிச் சென்றார்.
காரில் வனரோஜாவும், அவரது கணவரும் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தனர். நள்ளிரவைத் தாண்டி திருவண்ணாமலை - செங்கம் சாலையில் போயக் கொண்டிருந்தபோது, திடீரென கார் தாறுமாறாக ஓடி அருகே இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தோர் ஓடி வந்தனர்.
வனரோஜா, கணவர், கார் டிரைவர் மூவருக்கும் நல்ல அடி. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான காயம் ஏதும் இல்லை. உடனடியாக போலீஸாரும் விரைந்து வந்து அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்குப் பின்னர் வனரோஜா உள்ளிட்டோர் திரும்பினர்.
கார் டிரைவர் தூங்கி விட்டதால் விபத்து நடந்தது அல்லது வேறு ஏதேனுமா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications