குருவை சிறையில் அடைத்தவர்களுக்கு வன்னியர்கள் பாடம் புகட்டுவார்கள்.. ராமதாஸ்

காடுவெட்டி குருவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து தைலாபுரம் சென்ற குரு, டாக்டர் ராமதாஸை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
செய்யாத குற்றத்திற்காக ஜெ.குரு 8 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். இதற்கு காரணமானவர்களுக்கு வன்னிய மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
வன்னிய மக்கள், வன்னிய இளைஞர்கள், பா.ம.க.வினர் மீது தமிழக அரசு, போலீசை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. காவல்துறை என்பது பொதுவாக அனைத்து மக்களுக்கும், உடைமைகளுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு தர வேண்டிய துறையாகும். ஆனால் இந்த ஆட்சியில் எந்தவித காரணமும் இல்லாமல் யாரையும் கைது செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
தமிழக அரசு என்னை 12 நாட்கள் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தது. பின்னர் வெளியே வந்தவுடன் அறுவை சிகிச்சை பெற்ற நான், மிகுந்த வேதனையோடு இருந்தேன். வன்னியர்கள் 134 பேர் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் ஓரளவிற்கு ஆறுதலடைந்தேன்.
தற்போது உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி சிறையில் இருந்து குரு விடுதலை செய்யப்பட்டதால் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். எத்தனை அடக்கு முறைகள் என்றாலும் நானும், குருவும் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் வன்னிய மக்கள் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார் ராமதாஸ்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications