மிட் நைட்.. உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய விஏஓ.. டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற கடத்தல் கும்பல்!
தருமபுரி : அண்மையில் தூத்துக்குடி அருகே விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், தருமபுரி மாவட்டத்திலும் கனிம வளக் கொள்ளையை தடுக்க முயற்சித்த விஏஓவை நள்ளிரவில் டிராக்டர் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளங்கோ, மெணசி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். மெணசி பகுதியில் கனிம வளக் கொள்ளை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மழையையும் பொருட்படுத்தாமல் தனது இரு சக்கர வாகனத்தில் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக கூறப்படும் பகுதிக்குச் சென்றுள்ளார்.

அப்போது குண்டலமடுவு காளியம்மன் கோவில் அருகில் உளி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதிவேகமாகச் சென்றுள்ளது. அவற்றை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க விஏஓ இளங்கோ முயற்சித்த போது, அந்த டிராக்டர் நிற்காமல் விஏஓ மீது மோதும் வகையில் வேகமாகச் சென்றுள்ளது. அதிர்ச்சியடைந்த விஏஓ, அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் சிக்காமல் தப்பித்து சுதாரித்துக் கொண்டார்.
பின்னர், விஏஓ இளங்கோ, தன்னை மோதும் வகையில் வந்த டிராக்டர் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்ததில் அது, மெணசி பகுதியை சார்ந்த ராகவன் என்பவருடையது என்றும், இந்த நபர் சொந்தமாக ஜேசிபி இயந்திரம் கொண்டு கனிம வள கொள்ளைகளை திருடி தனது டிராக்டர் மூலமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இந்த கொள்ளை கும்பலுக்கு மெணசி ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு, பூதநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், துணைத் தலைவர் பெருமாள் ஆகியோர் உதவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கும்பலிடம் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ காவல் நிலையம், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே லூர்து பிரான்சிஸ் என்ற கிராம நிர்வாக அலுவலர் அவருடைய அலுவலகத்திலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம அலுவலர் மணல் கொள்ளையர்களால் கொலை முயற்சிக்கு ஆளானார்.
இந்நிலையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் நேர்மையாக செயல்படும் அரசு அதிகாரிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க வேண்டும் எனவும், தேவைப்படும் பட்சத்தில் கைத்துப்பாக்கி வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் தருமபுரியில் மேலும் ஒரு விஏஓ மீதான கொலை முயற்சி சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications