சுழற்றி எடுத்த வர்தா புயல் பாதிப்பு... தலைமை செயலகத்தில் மத்திய குழு.. ஓ. பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை
வர்தா புயல் குறித்து ஆய்வு நடத்த தமிழகம் வந்துள்ள மத்திய குழு தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்தியது.
சென்னை; வர்தா புயல் தாக்குதல் தொடர்பாக ஆய்வு நடத்த தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை இணைச் செயலாளர் பிரவீன் வசிஷ்டா தலைமையிலான மத்தியக் குழு முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தியது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை வர்தா புயல் உருகுலைத்துச் சென்றது. மரங்களும் மின்கம்பங்களும் வேரோடு சய்ந்தன. போக்குவரத்து, மின்சாரம் என அனைத்து முடக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அதிலிருந்து மீண்டு இயல்பு நிலை திரும்ப ஒரு வாரத்திற்கும் மேல் ஆனது.

இந்நிலையில், வர்தா புயல் பாதிப்புத் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் பிரவீன் வசிஷ்டா தலைமையில் மத்தியக் குழு சென்னை வந்துள்ளது. 9 பேர் கொண்ட இந்தக் குழு இன்று சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்துகிறது.
முதல்கட்டமாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் தமிழக அரசு அதிகாரிகளுடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பாதிப்புகள் குறித்து மத்தியக் குழு கேட்டறியும். பின்னர், வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பனகல் பூங்கா, அண்ணா வளைவு அருகே சேதமடைந்த சிக்னல் கம்பங்கள், திருமங்கலத்தில் மரக்கிளைகள் குவித்து வைக்கப்பட்டுள்ள கிடங்கு ஆகியவற்றை மத்தியக் குழுவினர் பார்வையிடுகின்றனர்.
சென்னையை ஆய்வு செய்த பின்னர், காஞ்சிபுரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு அங்கு செல்ல உள்ளது. மேலும், வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் பல்லாவரத்திலும் ஆய்வுகளை மேற்கொள்கிறது.
நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் மத்தியக் குழு ஆய்வு செய்கிறது. அங்கு கல்லுகடைமேடு, வெள்ளோடையில் சேதமடைந்த குடிசைகள், சின்னம்பேட்டில் பாதிக்கப்பட்டுள்ள வாழை, மா போன்ற தோட்டக்கலை பயிர்களையும் மத்திய குழு ஆய்வு செய்கிறது. 29ம் தேதி ஆய்வு முடியும் நிலையில், அன்றே டெல்லிக்கு மத்தியக் குழு புறப்பட்டு செல்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications