For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்த பல்வேறு கட்சி நிர்வாகிகள்

|

சென்னை: அதிமுகவுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருவதாக அக்கட்சி தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

யார் யார் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்ற பட்டியலையும் அது வெளியிட்டுள்ளது.

இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

Various party functionaries meet Jayalalithaa and extend support

டாக்டர் சேதுராமன்

அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை 24.4.2014 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ந. சேதுராமன், பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, இளைஞர் அணிச் செயலாளர் அஜீத் பிரகாஷ் உள்ளிட்டோரும்; மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார், பொதுச் செயலாளர் ஜி.எஸ். செல்வராசு, இளைஞர் அணித் தலைவர் ஜி.எம். ரவி வாண்டையார் உள்ளிட்டோரும்;

மனைவியுடன் ஜான் பாண்டியன்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பெ. ஜான் பாண்டியன், பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன், துணைப் பொதுச் செயலாளர்களான சந்திரன், நல்லுசாமி உள்ளிட்டோரும்;

ஜெகன்மூர்த்தி

புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பாவை எம். ஜெகன்மூர்த்தி, தலைமை நிலையச் செயலாளர் முகிலன், பொருளாளர் மாறன் உள்ளிட்டோரும்;

Various party functionaries meet Jayalalithaa and extend support

டாக்டர் பிரகாஷ்

இந்திய சுயாதீன திருச்சபைகள் மாமன்றத்தின் நிறுவனத் தலைவர் பேராயர் டாக்டர் மா. பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் ஜான் மில்டன், பொருளாளர் டாக்டர் ஜெ. தியோபால்ட் வசீகரன் உள்ளிட்டோரும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

பஷீர் அகமது

மேலும், இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் முகமது சுலைமான், மாநிலத் தலைவர் எம்.பஷீர் அகமது, பொதுச் செயலாளர் தி.மு. அப்துல்காதர் உள்ளிட்டோரும்; அகில இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் எஸ்ஜெ. இனாயத்துல்லாஹ், பொதுச் செயலாளர் ஒய். ஜஹிருதீன் அஹமத், தலைமை நிலையச் செயலாளர் சையத் ஷாதன் அஹமத் உள்ளிட்டோரும்;

ஷேக் தாவூத்

தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் எஸ். ஷேக் தாவூத், வணிக பிரிவுத் தலைவர் டி. தினேஷ் கார்த்திக், இளைஞர் அணித் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தலா உள்ளிட்டோரும்;

தாவூத் மியாகான்

இந்தியன் யூனியன் காயிதே மில்லத் தீக் கட்சியின் தலைவர் எம்.ஜி. தாவூத் மியாகான், பொதுச் செயலாளர் அ. முஹம்மது இஸ்மாயில், பொருளாளர் திருச்சி என். அப்துல் வஹாப் உள்ளிட்டோரும்;

எஸ்.எம்.பாக்கர்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் திரு. எஸ்.எம். பாக்கர், துணைத் தலைவர் ஐ. முகமது முனீர், பொதுச் செயலாளர் எஸ்.எம். சையத் இக்பால் உள்ளிட்டோரும் நேரில் சந்தித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்களுடைய முழு ஆதரவை தனித் தனியே தெரிவித்தார்கள்.

ஜெயலலிதா நன்றி

அதற்கு அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடன் ஓ.பி.எஸ்.

இந்நிகழ்வின் போது கழகப் பொருளாளரும், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன், கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சருமான கே.பி. முனுசாமி, தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

English summary
Various party functionaries have met ADMK chief cum Jayalalithaa and eztend their support to her party in the forthcoming lok sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X