வாசன் ஹாஸ்பிடல் பங்கு விற்பனை- கார்த்தி சிதம்பரத்தின் கம்பெனிக்கு தொடர்பா? அமலாக்கப் பிரிவு விசாரணை
சென்னை: வாசன் ஹெல்த் கேர் எனப்படும் வாசன் கண் மருத்துவமனையின் பங்குகள் விற்பனையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு தொடர்பிருக்கிறதா? இந்த விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஆம்புலன்ஸ்களை இயக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிகித்சா ஹெல்த் கேர் லிமிடெட் நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடர்ந்தது. இதில் கார்த்தி சிதம்பரத்தின் மீதும் வழக்கு தொடரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இந்த நிறுவனத்தில் தமக்கு எந்த ஒரு பங்கும் இல்லை என கார்த்தி சிதம்பரம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ரூ223 கோடி மதிப்பிலான கருப்புப் பணப் பரிமாற்றம், வாசன் ஹெல்த் கேர் நிறுவனம் மூலம் நடந்துள்ளது; இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு தொடர்பு உள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நாளேடுகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் எஸ். குருமூர்த்தி தொடர் கட்டுரைகளை எழுதியிருந்தார். அத்துடன் இது தொடர்பாக வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
வாசன் ஹெல்த் கேர் நிறுவனமானது 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டாக்டர் அருண், அவரது மனைவி மீரா ஆகியோர்தான் இந்த மருத்துவமனையின் முதல் பங்குதாரர்கள்.
இவர்கள் தங்களது 3 லட்சம் பங்குகளை துவாரகநாதனுக்கு விற்பனை செய்கின்றனர். துவாரகநாதனோ அதில் 1.5 லட்சம் பங்குகளை அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனத்துக்கு எந்த ஒரு பிரீமியமும் இல்லாமல் விற்பனை செய்திருக்கிறார்.
இந்த அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனத்தில் 3-இல் 2 பங்கு பங்குகள் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமானதாக கருதப்படும் அஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்துக்குரியவை.
அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனத்துக்கு எந்த ஒரு பிரீமியமும் இல்லாமல் 1.5 லட்சம் பங்குகளை துவாரகநாதன் விற்பனை செய்த விவகாரம்தான் இப்போது விஸ்வரூபமெடுத்துள்ளது.
இது தொடர்பாக ஒன் இந்தியாவிடம் கருத்து தெரிவித்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், இந்தியா, இலங்கை, துபை ஆகிய நாடுகளில் 175 மருத்துவமனைகளை நடத்தி வருகிற வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்தின் சில பணபரிவர்த்தனைகள் தொடர்பான அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
குறிப்பாக 2008ஆம் ஆண்டு அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனத்துக்கு 1.5 லட்சம் பங்குகள் எப்படி விற்பனை செய்யப்பட்டன என்பது குறித்து அமலாக்கப் பிரிவு விசாரிக்கிறது.
இந்த பரிவர்த்தனையில் ஈடுபட்ட நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் கார்த்தி சிதம்பரத்துக்கு பங்குகள் இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது என்று கூறினர்.
2002ஆம் ஆண்டு அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் இந்த விசாரணையை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
மேலும் 2004 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையில் தாக்கல் செய்த வருமான வரி கணக்கு விவரங்கள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள், கார்த்தி சிதம்பரம் நிறுவனத்துடனான பணபரிவர்த்தனைகள் ஆகியவற்றை தாக்கல் செய்யுமாறும் துவாரகநாதனுக்கு அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டுள்ளது. இந்த கோணத்திலான விசாரணை வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்தின் விஸ்வரூப வளர்ச்சி எப்படி சாத்தியமானது? என்பதற்கும் உதவக் கூடும் என்கின்றனர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications