பொன். ராதாதான் எம்.பி.. ஆனால் 'வசந்த் அன் கோ' வசந்தகுமார் கலக்குகிறாரே!!
சென்னை: கன்னியாகுமரி தொகுதி எம்.பியாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இருந்தாலும் கூட அந்தத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த வசந்த் அன் கோ உரிமையாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான வசந்தகுமார் கலக்கி வருகிறார்.
சமீபத்தில் பொன் ராதாகிருஷ்ணனிடம் தொகுதி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்த அவர் அதுதொடர்பாக பிட் நோட்டீஸையும் தொகுதியில் விநியோகித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த நிலையில் அடுத்து கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

வழக்கமாக மறப்பார்கள்
வழக்கமாக தோல்வி அடைந்தால் அந்த வேட்பாளர்கள் அந்தத் தொகுதியையே மறந்து விட்டு மற்ற வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள். ஆனால் வசந்தகுமாரோ தொகுதி தொடர்பாக தொடர்ந்து மெனக்கெட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

கன்னியாகுமரி வளர்ச்சிக்கு
இன்று வசந்தகுமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.

அழகுபடுத்த முனைந்த காங்கிரஸ்
இந்த மாவட்டத்தை மேலும் அழகுபடுத்தும் முயற்சியில் கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டு வந்தது.

விமான நிலையம் தேவை
இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் வகையிலும், மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையிலும், விமான நிலையம் அமைக்க வேண்டும்.

இரட்டை ரயில் பாதை தேவை
இதேபோல், நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும், சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான இரட்டை வழி ரயில் பாதையை விரைவில் அமைக்க வேண்டும்.

கவுடாவிற்குக் கடிதம்
இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவிற்கு கடிதமும் அனுப்பியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications