For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள்- பாஜக இடையே கடும் மோதல்- 6 பேர் மண்டை உடைப்பு

விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாஜகவினரிடையேயான கடும் மோதலால் சீர்காழியில் 6 பேர் மண்டை உடைந்தது.

By Mathi
Google Oneindia Tamil News

சீர்காழி: விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாஜகவினரிடையேயான கடும் மோதலால் சீர்காழியில் 6 பேர் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

தமிழகத்தில் சமண, பவுத்த விகாரைகள் இடிக்கப்பட்டுதான் இந்து கோவில்களாக்கப்பட்டுள்ளன. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டுவது நியாயமானால் தமிழகத்திலும் பவுத்த விகாரைகள் மீட்கப்பட வேண்டும் என்ற குரல் எழாதா? என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருந்தார்.

பதற்றத்தை கிளப்பிய பாஜக

பதற்றத்தை கிளப்பிய பாஜக

ஆனால் தமிழக பாஜகவினரோ, திருமாவளவன் இந்து கோவில்களை இடிக்க சொல்கிறார் என புரளி கிளப்பிவிட்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந்துத்துவா வெறியாளர் கைது

இந்துத்துவா வெறியாளர் கைது

திருமாவளவன் தலைக்கு இந்துத்துவா வெறி கொண்டவர்கள் ரூ1 கோடி விலை அறிவித்தனர். அப்படி அறிவித்த நபர் கைதும் செய்யப்பட்டார்.

விசிக எதிர்ப்பு

விசிக எதிர்ப்பு

இந்நிலையில் சீர்காழியில் திருமாவளவனுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மண்டை உடைந்தது

மண்டை உடைந்தது

இது பயங்கர மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 6 பேர் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.

English summary
Tension prevailed in Sirkazhi following a clash between the cadres of the BJP and the VCK on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X