விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய எந்த அறிவிப்பும் இல்லை.. திருமாளவன் காட்டம்
பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கக்கூடியதுதான் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கக்கூடியதுதான் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றும் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின்ன் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது விவசாய மக்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கக்கூடியது தான் என்று கூறிய அவர், போராடிய விவசாயிகள் கடன்களை ரத்து செய்ய அறிவிப்பு எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications