காவிரி: திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலை- ஸ்டாலினுக்கு திருமா கடிதம்!
காவிரி பிரச்சனைக்கான திமுகவின் இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
சென்னை: காவிரி பிரச்சனைக்காக திமுக இன்று கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலையில் இருப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடிதம் அனுப்பியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் தமிழக அரசு இதை ஏற்கவில்லை.
இதனால் பிரதான எதிர்க்கட்சியான திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் திமுகவின் தோழமைக் கட்சிகளின் கூட்டம்; நரித்தனமாக செயல்படுகிறது. ஆகையால் மக்கள் நலக் கூட்டணி இந்த கூட்டத்தைப் புறக்கணிக்கிறது என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்திருந்தார்.

மீண்டும் ஆலோசனை
இதனிடையே சென்னையில் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் நிலைப்பாடு என மக்கள் நலக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தோம்; ஆகையால் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தது என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களுடன் மீண்டும் ஆலோசிப்போம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முத்தரசனும் தயக்கம்
அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாட்டை கண்டுகொள்ளாமல் வைகோ தன்னிச்சையாக 'புறக்கணிக்கும்' என அறிவித்துவிட்டார் என இத்தீர்மானம் மறைமுகமாக சுட்டிக்காட்டியது. இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

வைகோவுடன் சந்திப்பு
மதிமுக பொதுச்செயலர் வைகோவையும் நேற்று இரவு அவரது வீட்டில் திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்று முடிவு அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

பங்கேற்பு இல்லை- திருமா கடிதம்
இதனிடையே இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் அனுப்பியுள்ள கடிதத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications