இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பைக் கைவிட்டு தமிழை ஆட்சி மொழியாக்க விசிக வலியுறுத்தல்
சென்னை : 1968-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது தீக்குளித்து தமது இன்னுயிரை ஈகம் செய்த மொழிப்போர்த் தியாகிகளைக்கொண்ட பெருமைக்குரிய மாநிலம் தமிழ்நாடு. எனினும், தமிழ் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் இந்தியைத் திணிப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தற்போது இந்தியைப் பயிற்று மொழியாகக்கொண்ட நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் திறக்கவேண்டும் என்கிற ஒரு நெருக்கடியை மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கின் மூலமாகஉருவாக்கியிருக்கிறார்கள்.
இவ்வாறு, தமிழ்நாட்டின்மீதும் இந்தி பேசாத பிற மாநில மக்களின் மீதும் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்கு மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சி இந்திய அளவில் மிக மோசமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என இம்மாநாடு எச்சரிக்கையோடு சுட்டிக்காட்டுகிறது.

இந்நிலையில், அரசியலமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் மத்தியில் ஆட்சி மொழியாக்கவேண்டும்; அதுவரை ஆங்கிலமே அலுவல் அல்லது இணைப்பு மொழியாக நீடிக்கவேண்டும். உச்சநீதிமன்றத்தின் அலுவல் மொழியாகவும் ஆங்கிலமே இருக்கவேண்டும். உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழியை அந்தந்த மாநிலங்களே தீர்மானித்துக்கொள்ள அதிகாரம் வழங்கப்படவேண்டும். மாநில அலுவல் மொழியாக அந்தந்த மாநில மொழியே இருக்கவேண்டும். மாநிலத்தில் பணியாற்றும் மத்திய அரசுப் பணியாளர்கள் அந்தந்த மாநில மொழிகளில் தேர்ச்சிபெற்றிருக்கவேண்டும்.

எனவே, இந்தியை மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 343 ம், இந்தி மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு பாடுபடவேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 351 ம் நீக்கப்படவேண்டும்; எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாக நடத்தவேண்டும்; அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications