ஐ.நா. சபையில் ராஜபக்சே பேச எதிர்ப்பு தெரிவித்து செப்.23-ல் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
சென்னை: ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்து வரும் 23-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் வரும் 25-ந் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே உரையாற்ற இருக்கிறார். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.
திமுக தலைமையிலான டெசோ அமைப்பு, மதிமுக ஆகியவை போராட்டங்களை நடத்தியுள்ளன. சென்னையில் 24-ந் தேதி 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் பேரணி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. சபையில் ராஜபக்சே உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் 23-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
திமுகவின் டெசோ அமைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற்றிருந்தாலும் அக்கட்சி தனியே போராட்டம் நடத்துகிறது.,


Click it and Unblock the Notifications
