சேனல் யுத்தத்தில் குதித்தது வி.சி.... "வெளிச்சம்" டிவியை தொடங்கி வைத்தார் விஜயகாந்த்!!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மருதம் டெலிவிஷன் நெட்வொர்க் சார்பில் ‘வெளிச்சம்' என்ற புதிய டிவி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளிச்சம் டிவி சேனலை தொடங்கி வைத்தார். 24 மணி நேரமும் ஒளிப்பரப்படும் இந்த சேனலில், ஒரு நாளைக்கு மூன்று முறை செய்திகள் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவிற்கு ஆதரவாக சன்டிவி, கலைஞர் டிவி உள்ளது. அதிமுகவிற்கு ஜெயாடிவியும் பல சேனல்களும் செய்திகளை வெளியிடுகின்றன.

இதேபோலக் காங்கிரஸ் பிரமுகர்கள் வசந்தகுமார் சார்பில் வசந்த் டிவியும், கே.வீ.தங்கபாலு சார்பில் மெகா டிவியும் இயங்கி வருகிறது. காங்கிரஸ் தொடர்பான செய்திகள் இத்தொலைக்காட்சிகளில் இடம்பெறுகின்றன.
மேலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மக்கள் தொலைக்காட்சியும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கேப்டன் டிவியும் இயங்கி வருகின்றன. கட்சி பிரச்சாரங்கள், ஆதரவு செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
நாளிதழ், டிவி சேனல்தான் அரசியல் கட்சிகளின் கொள்கைகளை மக்களிடம் விரைவில் எடுத்துச் செல்கிறது என்பது நம்பிக்கையாக உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தற்போது வெளிச்சம் என்ற டிவி சேனலை தொடங்கியுள்ளது.

இதன் தொடக்க விழா சென்னை அண்ணாநகர் விஜய் ஸ்ரீமகாலில் இன்று நடந்தது. விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் வெளிச்சம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனருமான தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். ஊடக முதன்மை செயலாளர் பனையூர் பாபு வரவேற்றார். கட்சியின் பொதுச் செயலாளர்கள் சிந்தனை செல்வன், ரவிகுமார், மாநில பொருளாளர் நூர் முகமது யூசுப் முன்னிலை வகித்தனர்.
விஜயகாந்த் - வைகோ
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ‘வெளிச்சம்' புதிய தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார்.இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகளின் சமூக வலைதளங்களை வைகோ திறந்து வைத்தார்.
மநகூட்டணி தலைவர்கள்
தொடக்க விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
வெளிச்சம் டிவி

விழாவில் பேசிய திருமாவளவன், வெளிச்சம் தொலைக் காட்சியை தொடங்கி வைக்க விஜயகாந்தை நான் அணுகிய போது ஏப்ரல் 14ம்தேதி நல்ல நாள் அல்ல. அது அஷ்டமி, மறுநாள் நவமி. இது உகந்த தல்ல என்றார். ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் என்பதால் தொடக்க விழாவை இன்றே நடத்த முடிவு செய்தோம். அஷ்டமி என்பது வடமொழி சொல் ஆகும். அது இந்துத்வாவின் கருத்தாகும்.
அம்பேத்கார் பிறந்தநாள்
அஷ்டமி என்பது அமாவாசையில் இருந்து 8வது நாளில் வருகிறது. அதனால் இது உகந்ததாக இருக்காது என்று விஜயகாந்த் கூறினாலும் அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது என்ற காரணத்தினால் இந்த ‘வெளிச்சம்' தொலைக்காட்சி இந்த நாளில் தொடங்கப்பட்டுள்ளது.
சர்வதேச தலைவர்
அம்பேத்கரின் பிறந்த நாளை இந்திய அளவில் கொண்டாட தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் சர்வதேச அளவில் உலகத் தலைவர்கள் வரிசையில் அவரை உயர்த்தி அமெரிக்காவில் அவரது பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள்.
அரசு விழா
பிரதமர் நரேந்திர மோடி, அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை அரசு விழாவாக நடத்துகிறார். அதனால் இந்த நாளில் ‘வெளிச்சம்' தொலைக்காட்சியை தொடங்க வேண்டும் என்பது எங்களது ஆசை.
வெற்றியை ஈர்க்கும் விஜயகாந்த்
இந்த நிகழ்ச்சியில் 5 தலைவர்களும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விஜய் என்பது வெற்றி காந்த் என்றால் ஈர்ப்பு. அதாவது வெற்றியை ஈர்க்கும் சக்தியாக விஜயகாந்த் திகழ்கிறார். அவர் இந்த தொலைக் காட்சியை தொடங்கி வைத்திருப்பது பூரிப்பாகவும், பெருமையாகவும், தலை நிமிர்ந்திருக்கவும் செய்கிறது.
கூட்டணிக்கு பாடுபட்ட வைகோ
விழா நடக்கக் கூடிய இந்த இடத்தை வைகோ தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இந்த கூட்டணியில் ஜி.கே.வாசன் இணைந்த பிறகுதான் கூட்டணியின் தன்மையும், வடிவமும் மாறிவிட்டது. இந்த கூட்டணி நீடிக்காது நிலைக்காது என்று கூறினார்கள். அரும்பாடுபட்டு கூட்டணி கட்டமைப்பை வலுப்படுத்தியவர் வைகோ.
வெள்ளை மனம்
ஒருவரிடம் பழகிய பிறகுதான் அவரைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். இந்த ஓரிரு மாதங்களில் விஜயகாந்துடன் சந்திக்க வாய்ப்பு அதிகம் கிடைத்தது. மனதில் பட்டதை கூறும் தன்மை உடைய விஜயகாந்த்தை கருப்பு எம்.ஜி.ஆர். என்று சொன்னாலும் அவரது உள்ளம் வெள்ளையாக இருக்கிறது.
மக்கள் நலக்கூட்டணி
தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெறுமோ இல்லையோ ஆனால் இந்த கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தது எங்களுக்கு பெரிய வெற்றி. தி.மு.க.வும், பாஜகவும் அவரை இழுக்க கடும் முயற்சி செய்தது. அந்த 2 பெரும் சக்திகளையும் மீறி மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்தார்.
வரலாற்று சிறப்பு
அவர் எந்த ஆசாபாசத்துக்கும் அடிபணியவில்லை. கூட்டணி வதந்திகளை பொடிப்பொடியாக்கி விட்டு ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்பு, ஆட்சி மாற்றம் ஆகிய 3 குறிக்கோளை கொண்ட மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்தது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என்றார் திருமாவளவன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications