ஆக. 19-ல் காவிரி டெல்டா முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு- தொல். திருமாவளவன்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வரும் 19-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் விவசாய சங்கங்கள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சொல்லவொண்ணா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை நிலைநாட்டவும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்கவும் மத்திய அரசுக்கு போதிய அழுத்தத்தைத் தமிழக அரசு தரவில்லை.

அனைத்து கட்சி குழு
இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச்சென்று பிரதமரைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை பலமுறை வற்புறுத்தியுள்ளோம். பிற அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

பேசவே இல்லையே..
ஆனால் தமிழக அரசு அந்தக் கோரிக்கையை அலட்சியப்படுத்தி வருகிறது. விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளைக்கூட அழைத்துப் பேச மறுக்கிறது.

டெல்டா பந்த்
இந்நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை உறுதிசெய்யும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும், விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும் நாகை, தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர் ஆகிய ஆறு டெல்டா மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

சிறுத்தைகள் ஆதரவு
டெல்டா விவசாயிகளின் உயிராதாரமான உரிமையைக் காப்பதற்கான இந்தக் கடையடைப்புப் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications