தமிழ்நாட்டு அரசியலின் மையம் என்றுமே கருணாநிதிதான்.. திருமாவளவன் புகழாரம்
தமிழ்நாட்டு அரசியலின் மையம் என்றுமே கருணாநிதி என்று விசிக தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
Recommended Video

சென்னை : தமிழ்நாட்டு அரசியலின் மையம் என்றுமே கருணாநிதி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 95வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாளையொட்டி பல்வேறு முக்கியத் தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று 95 ஆவது பிறந்தநாள் காணும் கருணாநிதிகருணாநிதிநீடூழி வாழ விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நெஞ்சார வாழ்த்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராளுமை வாய்ந்தவர்
மேலும், தனது 14ஆவது வயதில் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்த தலைவர் கருணாநிதி கடந்த எண்பதாண்டுகளாக அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டு ‘தனக்கு நிகர் தானே' என்கிற வகையில் மகத்தான சாதனைகள் படைத்த வரலாற்று நாயகனாக விளங்குகிறார். அரசியல் களத்தில் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் அதிநுட்பம் வாய்ந்த ஆற்றலாளராக முத்திரை பதித்தவர். குறிப்பாக கலை, இலக்கியம் போன்ற தளங்களில் பேராளுமை வாய்ந்த படைப்பாளியாக கோலோச்சியவர்.

50 ஆண்டுகால அரசியல்
பேரறிஞர் அண்ணாவுக்குப் பின்னர், தனது வலிமைவாய்ந்த அரசியல் உத்திகளால் கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் தன்னையே மையப்படுத்தித் தமிழக அரசியலைச் சுழல வைத்தவர். தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரின் கனவை நனவாக்கும் வகையில் சமூகநீதியின் பாதுகாப்பு அரணாக செயலாற்றியவர்.

சமூகப் புரட்சி
குறிப்பாக ‘பெரியார் நினைவு சமத்துவபுரம்' என்னும் குடியிருப்புகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கி, அமைதியான முறையில் ஒரு மகத்தான சமூகப் புரட்சியை நிகழ்த்தியவர். இன்றைக்கும் சாதி மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குபவர்.

பிறந்தநாள் வாழ்த்துகள்
தமிழகத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான கருணாநிதி இன்று மூப்பின் காரணமாக செயல்பட இயலாத நிலையிலிருந்தாலும், அவரே இன்றைக்கும் தமிழக அரசியலின் மையப்புள்ளியாக இருந்து பிற கட்சிகளை இயக்குபவராக விளங்குகிறார்.
இத்தகைய பேராற்றல் வாய்ந்த கருணாநிதி நூறாண்டுக்கும் மேல் நலமுடன் வாழ விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மனமார வாழ்த்துகிறது. இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications