ஓபிஎஸ் டீமிலிருந்து நழுவி சசிகலா அணியில் போய் விழுந்த "வீணை"!
ஓபிஎஸ் அணியிலிருந்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் திடீரென விலகியுள்ளனர்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி வீணை காயத்ரி சசிகலா அணியில் சேர்ந்துள்ளார். முக்கிய நிர்வாகிகள் பலரும் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகியுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் அதிமுக இரண்டாக உடைந்தது. இதில் அதிமுகவைச் சேர்ந்த 12 எம்பிக்கள் மற்றும் 11 எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் சேர்ந்துள்ளனர்.

அவர்கள் சசிகலா குடும்பத்தினரிடமிருந்து எப்படியாவது அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்றும் இரட்டை இலையை கைப்பற்றியாக வேண்டும் என்றும் தீவிரமாக உள்ளனர். மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வருவோம் என்றும் சூளுரைத்துள்ளனர்.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்து வீணை காய்த்ரி விலகியுள்ளார். அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் சசிகலாவால் அறிவிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவர் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இவர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது நினைவிடம் அருகே வீணை மீட்டி அஞ்சலி செலுத்தினார் என்பது நினைவுக்கூறத்தக்கது.
இதேபோல் நெல்லை மாவட்டம், செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் செல்லப்பா, கடையநல்லூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ஹனீஸ் ஆகியோரும் இன்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications