செங்கொடி’த் தோழருக்கு வீரவணக்கம்... உமாநாத் மறைவுக்கு கி.வீரமணி இரங்கல்
சென்னை: களம் பல கண்டு, தியாகத் தழும்புகளை ஏற்ற தீரர் எனப் புகழ்ந்து செங்கொடித் தோழருக்கு வீரவணக்கம் என மார்க்சிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் உமாநாத்தின் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்டு)யின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தோழர் உமாநாத் (92) இன்று மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
களம் பல கண்டு, தியாகத் தழும்புகளை ஏற்ற தீரர்! நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகவும் சிறப்பாகப் பணி யாற்றியவர்.
உமாநாத் அவர்களும், அவர் வாழ்விணையர் தோழர் பாப்பா உமாநாத் அவர்களும், தந்தை பெரியார் அவர்களிடத்திலும், நம்மிடத்திலும் மிகவும் அன்புப் பாராட்டியவர்கள்.
பொது வாழ்க்கையில் பண்பட்ட ஒரு பொதுவுடைமைவாதியைத் தமிழ்நாடு இழந்து விட்டது. எதையும், தக்க புள்ளி விவரங்களோடு துல்லியமாக பேசும் - எழுதும் வித்தகர்!
அவரது பிரிவால் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் சி.பி.எம். கட்சிக் கும், குடும்பத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறு தலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருச்சி மாவட்டத் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்துவார்கள்.
‘செங்கொடி'த் தோழருக்கு வீரவணக்கம்!
-இவ்வாறு அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications