என்கவுண்டர் பயம்... தமிழக அரசிடம் சரணடைய வீரப்பன் கூட்டாளி விருப்பம்
சென்னை: கர்நாடக காவல்துறையினர் என்கவுன்ட்டர் செய்து கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தற்போது வட மாநிலத்தில் தலைமறைவாக உள்ள மலைவாழ் விவசாயி ராவணன் என்பவர், தமிழக அரசிடம் சரணடைய தயாராக இருப்பதாக ஜூலியஸ் என்ற சமூக ஆர்வலர் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜூலியஸ் கூறியதாவது: கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியைச் சேர்தவர் ராவணன். மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்தவர். சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளியான இவர் மீது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், குட்டி வீரப்பன் என்பவருடன் சேர்ந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக கர்நாடக காவல் துறையினர் அவர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அவரை என்கவுன்ட்டர் செய்ய திட்டமிடுவதாக அறிந்த அவர் தலைமறைவானார்.
வட மாநிலத்தில் தலைமறைவாக இருந்த அவரை சந்தித்தபோது தமிழக அரசிடம் சரணடைய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு என்கவுன்ட்டர் செய்துவிடும் என்பதால் ஊர் ஊராகச் சுற்றித் திரியும் அவர், தமிழக அரசு தன்னை காப்பாற்ற வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக காவல்துறையின் நடவடிக் கையால் இது வரை 20-க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
ஏற்கெனவே சின்னபி (எ) மோட்டோ சரணடைய விருப்பம் தெரிவித்தபோது கர்நாடக காவல் துறை நடவடிக்கையால் அவர் சரணடைய முடியாமல் போனது.
கர்நாடக காவல் துறையினரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்குவதால் என்னையும் கர்நாடக அரசு என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டுள்ளது. எனவே, தமிழக, கர்நாடக அரசுகள் இப்பிரச்சினை குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரணடைய விருப்பம் தெரிவித்துள்ள ராவணனை சரணடைய வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக காவல்துறையால் பாதிக்கப்படுவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் எனக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என்றார்.
பேட்டியின்போது, ராவணன் பேசிய ஒளி, ஒலிப்பதிவை செய்தியாளர்களிடம் ஜூலியஸ் காட்டினார். கண்ணீருடன் பேசும் ராவணன், கர்நாடக காவல்துறையினரிடம் இருந்து தன்னைக் காக்குமாறு தமிழக அரசுக்கு விடுக்கும் வேண்டுகோள் அதில் இடம்பெற்றுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications