காய்கறிகளைத் தொடர்ந்து பாலுக்கும் வந்தது ”சோதனை”- கேரள, தமிழக எல்லையில் தீவிர சோதனை!
செங்கோட்டை: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் காய்கறி, கோழி, மாடுகள் மட்டுமின்றி லட்சக்கணக்கான லிட்டர் பால் டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலிருந்து வழக்கத்திற்கு அதிகமான அளவு பால் கொண்டு செல்லப்படுகிறது.
இதில் கலப்படம் இருப்பதாகக் கூறி முழுமையான ஆய்வுகளை நடத்திய பின்பே அம்மாநிலத்திற்குள் பால் டேங்கர் லாரிகளை விடவேண்டும் என்று கேரள அரசு அம்மாநில உணவு பாதுக்காப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கப் பிரிவினர் சோதனை:
இதையடுத்து எல்லைப்பகுதிகளான செங்கோட்டை புளியரை, ஆரியங்காவு சோதனைசாவடி ,குமுளி, பாலக்காடு, களியக்காவிளை உட்பட ஆறு இடங்களில் பால் வண்டிகளை, கேரள உணவு பாதுகாப்பு அமலாக்கப் பிரிவினர் சோதனை செய்து வருகின்றனர்.

ஆய்வாளர்கள் முகாம்:
இதற்காக தமிழக கேரளா எல்லை ஆரியங்காவு பகுதியில் சோதனைச்சாவடியில் தற்காலிக ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் திருவனந்த புரம்,கொல்லம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உணவு பாதுகாப்புத்துறை உதவி ஆணையாளர் அஜித்குமார் தலைமையில் ஆய்வாளர்கள் செரிப்,சுனில்,அனக்ஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் இங்கு முகாமிட்டுள்ளனர்.

ஓணம் பண்டிகை முடியும் வரை:
மேலும் ஓணம் பண்டிகை முடியும் வரை பால் கலப்படம் தொடர்பான ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும் என அதிகாரிஅஜித்குமார் தெரிவித்துள்ளார்.

வாகன போக்குவரத்து அதிகரிப்பு:
தமிழகத்தில் இருந்து கேரளாவை நோக்கி செல்லும் காய்கறிகளைத் தொடர்ந்து தற்போது பாலுக்கும் கேரள மாநில அரசு "செக்" வைத்திருப்பது பால் உற்பத்தியாளர்கள் மத்தியிலும்,தேசிய நெடுஞ்சாலையில் எராளமான வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டு வருகிறது.விவசாயிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சோதனை காரணமாக தினமும் அதிகாலை முதல் மதியம் வரை தமிழக, கேரளா எல்லை பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரித்துவருகிறது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications