கூர்தீட்டிய அரசியல் விமர்சகரகாக திகழ்ந்தவர் சோ : வேல் முருகன் புகழாரம்
சென்னை: மரியாதைக்குரிய சோ மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர், அரசியல் ஆலோசகர் என பன்முகம் கொண்ட சோ ராமசாமி அதிகாலை காலமானார். அவருக்கு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து சென்னையில் அவரது இல்லத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் சோ ராமசாமிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் முதுபெரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மரியாதைக்குரிய சோ ராமசாமி இன்று சென்னையில் காலாமானர் என்பது பெருந்துயரத்தைத் தருகிறது.
சட்ட ஆலோசகராக, நடிகராக, பத்திரிகையாளராக, கூர்தீட்டிய அரசியல் விமர்சகரகாக வாழ்நாளில் திகழ்ந்தவர் சோ ராமசாமி . அவரது கருத்துகள் எதுவும் நமக்கு உடன்பாடானது அல்ல என்றபோதும் பன்முக ஆளுமைத்தன்மையோடு திகழ்ந்த மரியாதைக்குரியவர்.
ஆண்டு தோறும் ஜனவரி மாதம் சோ நடத்தி வந்த துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வாகவே இருந்து வந்தது. தமிழகத்தின் அரசியல் மாற்றங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் பல நேரங்களில் மையமாகவும் இருந்திருக்கிறார் மறைந்த மரியாதைக்குரிய சோ.
மரியாதைக்குரிய சோ மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது" என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications