பூட்டுத்தாக்கு கிராமத்தில் திருடர்கள் அட்டகாசம்... மாஜி அரசு அதிகாரி வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை!
வேலூர்: வேலூரில் முன்னாள் அரசு அதிகாரி வீட்டில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பூட்டுத்தாக்கு கிராமத்தினைச் சேர்ந்தவர் ரவீந்திரன் என்ற ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. நேற்றிரவு இவரது வீட்டிலிருந்து பணம் மற்றும் நகையினை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இன்று காலையில் வீட்டில் பார்த்த போது, 35 பவுன் நகையும், 10 ஆயிரம் ரொக்கமும் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரவீந்திரன் உடனடியாக வேலூர் சரக காவல்துறையில் புகார் செய்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இக்கொள்ளைச் சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொள்ளைச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களாக அரசு அதிகாரிகளின் வீடுகளைக் குறிவைத்து இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications