கள்ளக்காதலியை நண்பர்களுக்கு இரையாக்கிய கொடூரம்! 10 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை!!
வேலூர்: வேலூரில் இளம்பெண்ணை கள்ளக்காதலுனும் அவனது நண்பர்களும் கொடூரமாக பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காட்டைச் சேர்ந்த கங்கா என்ற பெண்ணுக்கும் அதே பகுதியை ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கங்கா, கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன் கங்காவுக்கு வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி திருமணம் செய்யாமல் இருவரும் வாழ்ந்து வந்தனர்.

புதிய கள்ளக்காதலனுடன் உல்லாசம்
இந்நிலையில், கங்காவுக்கு மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. கள்ளக்காதலனுக்கு தெரியாமல் கங்கா அவருடன் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்தும் வந்துள்ளார். இந்த விவகாரம் கள்ளக்காதலனுக்கு தெரிய வந்ததை அடுத்து ஆத்திரம் அடைந்த அவரும், கங்காவிடம் சண்டைப் போட்டுவிட்டு பிரிந்து விட்டார்.
இதை தொடர்ந்து, கங்கா வேறு ஒரு புதிய கள்ளக்காதலனோடு கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்து உள்ளார்.
புதிய கள்ளக்காதலனின் சதி
புதிய கள்ளக்காதலனுக்கு, கங்காவின் கடந்த கால நடவடிக்கைகள் அனைத்தும் தெரிய வந்ததது. இதை அவர், தனது நண்பர்களிடம் கூறி இருக்கிறார். உடனே அவர்கள் கங்காவை தாங்களும் அடைய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். இதற்கு சம்மதம் தெரிவித்த புதிய கள்ளக்காதலன், தனது நண்பர்களுக்கும் கங்காவை இரையாக்க நினைத்து அவரை காட்பாடியை அடுத்த வள்ளிமலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
இளம்பெண்ணை சீரழித்த கும்பல்
ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கங்காவை அழைத்துச் சென்றபோது, அங்கு மறைந்திருந்த புதிய கள்ளக்காதலனின் நண்பர்கள் 10 பேர் கொண்ட ஒரு கும்பல் கங்காவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. கங்கா, தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியும், தன்னை காப்பாற்றக் கூறி கத்தி கூச்சலிட்டும் உள்ளார்.
ஆனாலும் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த அந்த கும்பல் ஆசை தீர்ந்ததும் கங்காவை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டது.
பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல்
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு படுகாயமடைந்த கங்காவின் அலறல் சத்தம்கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, கங்கா சீரழிக்கப்பட்டு அலங்கோலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், கங்காவை மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
10 பேர் கொண்ட கும்பலுக்கு வலை வீச்சு
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரண நடத்தினார். மேலும், கங்காவை சீரழித்துவிட்டு தப்பியோடிய 10 பேர் கொண்ட கும்பலை உடனடியாக பிடிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications