தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது தடியடி... இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரும் வேல்முருகன்
சென்னை: நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் குளிர்பான ஆலைகள் வெளியேறக் கோரி அமைதி வழியில் போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்திய இன்ஸ்பெக்டர் சிவமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை அருகே கோககோலா, பெப்சி குளிர்பான ஆலைகள் அமைவதை எதிர்த்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். அதோடு, போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் உள்ளிட்ட 500 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஆனால், அமைதியாக போராடிய தங்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குளிர்பான ஆலைகள்...
திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோககோலா, பெப்சி ஆலைகள் தாமிபரணி நீரை இந்த உறிஞ்சி எடுப்பதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படுகிறது.

போராட்டம்...
ஆகையால் இந்த பன்னாட்டு பகாசுர ஆலைகளை வெளியேற்றக் கோரி நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இன்று (அக்டோபர் 27) என் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை அமைதி வழியில் நடத்திக் கொண்டிருந்தோம்.

குடிபோதையில் தடியடி...
ஆனால் கோககோலா, பெப்சி ஆலைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கங்கைகொண்டான் காவல்துறை இன்ஸ்பெக்டர் சிவமுருகன் என்பவர் பணியில் குடிபோதையில் இருந்தபடியே திடீரென காட்டுமிராண்டித்தனமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது கொடூரமாக தடியடி தாக்குதலை நடத்தினார்.

படுகாயம்...
இதில் 10க்கும் மேற்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடவடிக்கை தேவை...
அமைதி வழியில் போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது தடியடி நடத்தி பன்னாட்டு ஆலைகளால் ஏவிவிடப்பட்ட ரவுடி போல நடந்து கொண்ட கங்கை கொண்டான் இன்ஸ்பெக்டர் சிவமுருகன் மீது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது...
இந்நிலையில், நெல்லையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீதான தடியடியைக் கண்டித்து திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications