வேல்முருகனுக்கு பதவி வழங்க ஜெயலலிதா திட்டம்?
சென்னை: அதிமுகவின் கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு கவுரவமான பதவி கொடுக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் தேமுதிக, மதிமுக, பாமக, இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, புதிய நீதி கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
இதில் அதிமுகவின் பரம எதிரியான பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் சார்பில் வட மாவட்டங்களில் அதிக அளவு வேட்பாளர்களை களம் இறக்கினார்கள். ஆனால் இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புணி ராமதாஸ் மட்டுமே வெற்றிக் கனியை பறித்தார். மற்றவர்கள் மிக மோசமான தோல்வியை தழுவினர்.
இந்த நிலையில் வட மாவட்டங்களில் பாமகவை அடியோடு சாய்த்தது, அதிமுகவின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தது, ஈழத் தமிழர்கள் விவகாரத்தை கையாண்ட விதம், அதிமுக தலைமையுடன் நடந்து கொள்ளும் விதம், மேடைகளில் முதல்வர் குறித்து மக்கள் ரசிக்கும்படி பேசுவது என பல பிளஸ் பாயிண்ட்கள் வேல்முருகனிடம் உள்ளது என உளவுத்தறை நோட் போட்டதாம்.
மேலும், தேர்தல் வெற்றிக்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் வேல்முருகன் ஜெயலலிதாவை சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 20ம் தேதி சந்தித்தார்.
இந்நிலையில் வேல்முருகனுக்கு கவுரவமான பதவி கொடுக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications