நிர்வாகத்தில் தலையிடும் ஆளுநர்... துணை போவோரை மக்கள் சும்மா விடமாட்டார்கள்.. வேல்முருகன்
அரசு நிர்வாகத்தில் தலையிடும் ஆளுநருக்கு துணை போவோரை தமிழக மக்கள் சும்மா விடமாட்டார்கள் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி கூறியுள்ளது.
சென்னை : அரசு நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீடு என்பது அத்துமீறல் மட்டுமே அல்ல; அது அரசமைப்புச் சட்டத்துக்கே எதிராக, தெரிந்தே செய்யும் குற்றம். இதற்குத் துணைபோவோரையும் கூட தமிழக மக்கள் சும்மா விடமாட்டார்கள் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : ஆளுநர் என்பவர் யார்; அவருக்குண்டான பொறுப்பு, அதிகாரம் மற்றும் அவற்றிற்கான வரம்பு ஆகியவை என்ன என்பதை அரசமைப்புச் சட்டம் வரையறுத்துச் சொல்லியிருக்கிறது.
அதன்படிதான் ஆளுநர்கள் செயல்பட வேண்டும்; அப்படி செயல்படாத பட்சத்தில் நாடு அதற்கான எதிர்வினையையும் ஆற்றிவந்திருக்கிறது.
வரலாறு இப்படியிருக்க, தமிழ்நாட்டிற்கு இப்போது ஆளுநராக வந்திருக்கும் பன்வாரிலால் புரோகித் அவர்கள், ஆளுநருக்குரிய பொறுப்பு மற்றும் அதிகார வரம்பினைத் தாண்டி அரசு நிர்வாகத்தில் தலையீடு செய்திருக்கிறார்.

திட்டமிட்டு தான் செயல்படுகிறார்
முதல் நாள் கோவையில் வரம்பை மீறி இவர் நடத்திய கலந்தாய்வினை தமிழகமே ஒன்று சேர்ந்து கண்டிக்கிறது; ஆனால் அதைக் கண்டுகொள்ளத் தயாரில்லாமல், வீம்புக்கு மறுநாளும் அங்கே ஆய்வில் ஈடுபடுகிறார். அப்படியென்றால் வேண்டுமென்றே திட்டமிட்டபடிதான் செயல்படுகிறார். ஆளுநர் என்பவர் யார்; அவருக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரம், பொறுப்பு மற்றும் அவற்றிற்கான வரம்பு பற்றியெல்லாம் தெரியாத குழந்தையல்ல இவர்.

பின்னணியில் மத்திய அரசு
பழுத்த, மூத்த, அரசியலில் நீண்ட அனுபவம் உள்ள இவர் இப்படிச் செய்கிறார் என்றால் அது தன்னை நியமித்த மேலிடத்தின் கட்டளைப்படியே நடந்துகொள்கிறார் என்பதுதான் பொருள். இதனை பாஜக நியாயப்படுத்துவதிலிருந்தே அவர்களின் மத்திய அரசுதான் இவருக்குப் பின்னால் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

தப்பு செய்கிறவர்கள்
தமிழக ஆட்சியாளர்களும் இதை நியாயப்படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் தப்பு செய்கிறவர்களாகவும் அதன் மூலம் மடியில் பெருங் கனம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்றுதான் பொருள். எனவே அரசு நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீடு என்பது அத்துமீறல்.

மக்கள் விடமாட்டார்கள்
அதுமட்டுமல்ல அரசமைப்புச் சட்டத்துக்கே எதிராக, தெரிந்தே செய்யும் குற்றமாகும்! இதற்குத் துணைபோவோரையும்கூட தமிழக மக்கள் சும்மா விடமாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருவள்ளுவருக்கு காவிச் சாயமா? தமிழர்களின் அடையாளத்தைச் சிதைக்கும் ஆளுநர் - வேல்முருகன் கண்டனம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications