உயிரை வாங்கும் ஆவிதான் காவி என்பது தெரிந்தே அனிதாவைப் பலியிட்டனர் பாவிகள்.. வேல்முருகன்
அரியலூர் மாணவி அனிதாவை தெரிந்தே பலியிட்டு விட்டனர் பாவிகள் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை : நீட் தேர்வால் மருத்துவ கனவு நிறைவேறாது என்ற விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : 12ஆம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்கள்; மருத்துவ கட்ஆஃபில் இது 196.75. தனது வாழ்க்கைக் கனவு மற்றும் குடும்பத்தின் கனவு நிறைவேறியாச்சு;

எம்.பி.பி.எஸ் சீட் உறுதி என்ற மகிழ்ச்சியிலிருந்த மாணவியை பேரிடியாய்த் தாக்கியது "நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு!" என்ற அந்த துரோகச் செய்தி. "நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்கவேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும்; மருத்துவராகும் கனவு பறிபோய்விடும்" என உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார் அனிதா.ஆனால் தீர்ப்பு எதிராகவே ஆனது.
இந்நிலையில் அனிதா "தற்கொலை செய்துகொண்டார்" என்ற செய்தி வந்து தாக்குகிறது. ஆனால் நாம் நம்பவில்லை. இது தற்கொலை இல்லை. இல்லவே இல்லை. "நீட்"டை நுழைத்த மோடி சாமிக்கு பூசாரி எடப்பாடி கொடுத்த நரபலி! அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த குழுமூர் சண்முகத்தின் மகள் அனிதா. சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்கிறார். உயிரை வாங்கும் ஆவிதான் காவி என்பது தெரிந்தே அனிதாவைப் பலியிட்டனர் பாவிகள்! அனிதாவுக்கும் அவரது எளிய குடும்பத்திற்கும் தனது கண்ணீரைக் காணிக்கையாக்குகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!, என்று கூறியுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications