விழுப்புரத்தில் தாய் மகன் படுகொலை சம்பவம்- உரிய நடவடிக்கை எடுக்க வேல்முருகன் வலியுறுத்தல்
விழுப்புரத்தில் தாய் மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விதவைத் தாயும், மகனும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், வேலாம்புதூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தாயும் மகனும் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். அந்த விதவைத் தாயின் 14 வயது சிறுமி பாலியல் வல்லுறுவுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உரிய நீதிவிசாரணை தேவை என்பதை பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், விழுப்புரம் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளை காவல்துறை இன்னும் கைது செய்யவில்லை என்பதாகவும் தகவல் வருகிறது.
இதற்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்; கொலையுண்ட குடும்பத்துக்கு நீதியும் உரிய இழப்பீடும் வேண்டும்.
நெஞ்சைப் பதைபதைக்கச் செய்யும் இதுபோல் கொடிய சம்பவங்கள் திட்டமிட்டுத்தான் தொடர்கின்றனவோ என்றும் சந்தேகம் எழுகிறது.
இந்த கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
கொலையுண்ட குடும்பத்துக்கு உரிய நீதியும் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இத்தகைய கோச்ர சம்பவம் இனியும் தொடராமல் இருக்க முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications