வேங்கைவயல் குற்றவாளி யார்? டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர்.. சிபிசிஐடி போலீசார் அதிரடி முடிவு!
புதுக்கோட்டை : வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சந்தேகத்திற்கிடமான 11 பேரிடம் டிஎன்ஏ டெஸ்ட் நடத்த முடிவெடுக்கப்பட்ட நிலையில், ரத்த மாதிரி கொடுக்க 8 பேர் மறுப்பு தெரிவித்தனர். 3 பேர் மட்டுமே ரத்த மாதிரி கொடுத்துள்ள நிலையில், மீதமுள்ள 8 பேரும் பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
வேங்கைவயல் கொடூரம் : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் மர்ம நபர்கள் மனிதக்கழிவை கலந்தனர். அந்த ஓவர் டேங்க்கில் இருந்து வரும் குடிநீரை குடித்தவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கடந்த டிசம்பர் 26ஆம் தேதி, அந்த குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அத்துடன் சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டனர். இதற்கிடையே குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது 2 ஆண்கள், ஒரு பெண்ணின் மனித கழிவு என்பது டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
டிஎன்ஏ பரிசோதனை : இந்த விவகாரத்தில் சந்தேகத்திற்குரிய 11 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து, அதற்காக புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். இதையடுத்து நீதிமன்றம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதி வழங்கியது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி உதவிப் பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, வேங்கைவயல் விவகாரத்தில் அடையாளம் காணப்பட்ட 11 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்க, ஏப்ரல் 25ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. பயிற்சி காவலர் முரளி ராஜா, இறையூர் மற்றும் கீழ முத்துக்காட்டைச் சேர்ந்த இரண்டு நபர்கள் என மூவர் மட்டுமே இன்று டிஎன்ஏ பரிசோதனைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராகினர்.
சிபிசிஐடி அதிரடி : அவர்களிடம் மட்டும் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. மற்ற எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு நாங்கள் வரமாட்டோம் என்று சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், டி.என்.ஏ பரிசோதனைக்கு வர மறுத்த எட்டு பேருக்கும், பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என நீதிமன்ற அனுமதியுடன் சிபிசிஐடி காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications