அப்படீன்னா, அப்போது காங்.கின் கைப்பாவையாக திமுக இருந்ததா.. வெங்கையா நாயுடு கேள்வி
சென்னை: அதிமுக பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவதாக கூறுவது திமுகவின் தரம் தாழ்ந்த அரசியல் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் ஆட்சியின் போது திமுக காங்கிரஸின் கைப்பாவையாக இருந்ததா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
2 நாட்கள் சுற்றுப்பயணமாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று தமிழகம் வந்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அகில இந்திய வானொலி நிலைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு பிரிவு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திறனாய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிலையில் வெங்கய்ய நாயுடு சென்னை கமலாயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழிசை,பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுனர்.

அனைத்து உதவிகளையும் செய்கிறது
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது
எந்தக் கட்சியும் பாஜக மீது குற்றம் சுமத்த முடியாது என தெரிவித்தார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

எல்லா பிரசனைகளிலும் தலையிடு
மாநில அரசுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது வருவதாகவும் அவர் கூறினார். மீனவர் பிரச்சனை உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளிலும் மத்திய அரசு தலையிட்டு வருவதாகவும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

உட்கட்சிப் பிரச்சனையில் தலையிடாது
மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்றும் வெங்கையா நாயுடு கூறினார். அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சனையில் பாஜக தலையிடாது என்றும் அவர் தெரிவித்தார்.

திமுகவின் தரம் தாழ்ந்த அரசியல்
பாஜகவின் கைப்பாவையாக அதிமுக செயல்படுவதாக திமுக கூறுவது தரம்தாழ்ந்த அரசியல் என்றும் அவர் சாடினார். காங்கிரஸ் ஆட்சியில் திமுக, காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக இருந்ததா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications