பெங்களூரில் பிறந்தாலும் எனக்கு புகுந்த வீடு சென்னைதான்: பிறந்தநாள் விழாவில் சரோஜாதேவி பேச்சு
சென்னை: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தன்னுடைய பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இந்நிகழ்வில் நடிகர் சிவகுமார், நடிகர் சங்க நிர்வாகிகள் மனோபாலா, குட்டி பத்மினி, உதயா, ரமணா, ஹேமசந்திரன், அயுப் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் சரோஜா தேவி பேசியதாவது: நான் முதலில் நடிகர் சிவகுமார் அவர்களிடம் தான் சென்னைக்கு வந்து பிறந்த நாள் கொண்டாடுவது பற்றியும் நிவாரண நிதி வழங்குவது பற்றியும் கூறினேன். நான் அதை பற்றி அவரிடம் கூறியதும் உடனே ஏற்பாடு செய்துவிடலாம் என்று கூறி என்னை உற்சாகப்படுத்தினார்.

நடிகர் சிவகுமார் மிகவும் நல்ல மனிதர், எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் நான் என்னுடைய வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.
நான் முன்னொரு காலத்தில் மிகப்பெரிய நடிகையாக வலம்வந்த போது நடிகர் சங்கத்துக்கு ரூபாய் 5௦,௦௦௦ நன்கொடையாக வழங்கினேன். அப்போதைய நடிகர் சங்க நிர்வாகியான திரு.வி.கே.ராமசாமி அவர்கள் நான் ரூபாய் 5௦,௦௦௦ நன்கொடை அளித்திருக்கிறேன் என்று என்னை பெரிதும் பாராட்டினார். ஏனென்றால் அப்போதைய காலத்தில் அது மிகப்பெரிய தொகையாகும். ஆனால் அந்த பணத்திற்கான ரசீதும் வரவில்லை, அந்த பணம் என்ன ஆனது என்றும் தெரியவில்லை.
ஆனால் இப்போது வந்துள்ள நடிகர் சங்க பொறுப்பில் இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள். அவர்கள் அனைவருக்கும் திரைத்துறையில் நடிகர்களின் கஷ்டநஷ்டங்கள் அனைத்தும் நன்கு அறிந்து அனைவரும் மிகவும் துடிப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
நான் பெங்களூரில் பிறந்திருந்தாலும் எனக்கு புகுந்த வீடு சென்னை தான். என்னுடைய உயிர் பிரிந்தால் கூட சென்னையில்தான் பிரியவேண்டும் என்று நான் இறைவனை பிராத்திப்பது உண்டு என்று அவர் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications