ஜெ.சிகிச்சை வீடியோ வெளியீடு.... முன்ஜாமீன் கோரி வெற்றிவேல் ஹைகோர்ட்டில் மனு
ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டதை அடுத்து தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் மனு கோரி விண்ணப்பித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோவை வெளியிட்டதை அடுத்து தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அங்கு சிகிச்சை பெற்றபோது அவரை பார்க்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, டிசம்பர் 5-ஆம் தேதி அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது. மேலும் ஆர்கே நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் சசிகலா குடும்பத்துக்கும் ஜெயலலிதா மரணத்துக்கும் தொடர்பிருப்பது போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி, அதாவது இடைத்தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்னர், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை எடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒன்றை வெளியிட்டார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் அவர் மீது தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர்
வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு தொடுத்தார்.
அதன்பேரில் அவரை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியான விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி வெற்றிவேல் மனுதாக்கல் செய்துள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications