திருமணம் ஆகாத விரக்தியில் பூச்சி மருந்தை குடித்து வாலிபர் தற்கொலை
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் ஒருவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டையை அடுத்து இருக்கும் வி. களத்தூர் வண்ணாரம்பூண்டியைச் சேரந்தவர் ரகுராமன்(29). அவர் உள்ளூரில் சைக்கிளுக்கு பஞ்சர் போடும் கடை வைத்துள்ளார். அவரது வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து பெண் பார்த்து வந்துள்ளனர்.

அவரது குடும்பத்தார் கடந்த சில ஆண்டுகளாக ரகுராமனுக்கு பெண் தேடி வந்தார்கள். ஆனால் அவருக்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை. இன்னும் திருமணமாகவில்லையே என்ற கவலை ரகுராமனுக்கு ஏற்பட்டது. இதனால் சோகமாக இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இதையடுத்து அவர் நேற்று முன்தினம் தன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். இது குறித்து வி. களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications