விஎச்பியும், பிற கட்சிகளுமே பிரச்சினைக்குக் காரணம்.. வைரமுத்து வக்கீல் பொளேர்
வைரமுத்து கூறியதை விஹெச்பியும் அரசியல் கட்சிகளும்தான் பெரிதாக்கியதாக வைரமுத்துவின் வக்கீல் தெரிவித்துள்ளார்.
சென்னை: வைரமுத்து கூறியதை விஹெச்பியும் அரசியல் கட்சிகளும்தான் பெரிதாக்கியதாக வைரமுத்துவின் வக்கீல் தெரிவித்துள்ளார்.
ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதாக கவிஞர் வைரமுத்து மீது கொளத்தூர், சிந்தாதரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைரமுத்து தரப்பில் சரமாரியான குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. அமெரிக்கா ஆராய்ச்சியாளர் கட்டுரையைதான் வைரமுத்து சுட்டிக்காட்டியதாக வைரமுத்துவின் வழக்கறிஞர் கூறினார்.
மேலும் ஆண்டாள் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க போராடினார் என்றே வைரமுத்து பேசினார் என்றும் வைரமுத்துவின் வக்கீல் தெரிவித்தார். ஆராய்ச்சியாளரின் கட்டுரைக்கு அரசியல் கட்சிகள் குற்றச்சாயம் பூசுவதாகவும் வைரமுத்து தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
விஹெச்பி மற்றும் அரசியல் கட்சிகளே இந்த விவகாரத்தை பெரிதாக்கி உள்ளன என்றும் வைரமுத்துவின் வக்கீல் குற்றம் சாட்டினார். வைரமுத்து கூறியது அவரது சொந்தக் கருத்து அல்ல என்றும் வைரமுத்துவின் வக்கீல் நீண்ட வாதத்தை முன்வைத்தார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications